சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி சேவை கைவிட்டுச் சென்றதாக தீர்மானிக்கப்படும்: பொலிஸ் திணைக்களம்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 05:46.34 AM GMT ]
வெளிநாடு சென்ற அவர் இதுவரை நாடு திரும்பவில்லை. அத்துடன் தாமதம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கும் இதுவரை அறிவிக்கவில்லை என திணைக்களம் கூறியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய கொண்டு வரப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது அமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய வந்த பொலிஸ் ஊடகப் பிரிவின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி விடுமுறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.
அங்கு கல்வி பயிலும் தனது மகனை பார்ப்பதற்காக சென்ற அவர்கள் அங்கேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் அவருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக மீண்டும் நாடு திரும்புவதில்லை என தீர்மானித்துள்ள அவர், அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மாகாண சபை முறைமை ஒழிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி வழங்கினார்: குணதாச அமரசேகர
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 06:01.07 AM GMT ]
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, 13வது திருத்தச்சட்டம், பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அது குறித்து அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை முறைமையை உடனடியாக ஒழிக்க முடியாது. படிப்படியாகவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது அதனை தனது அதிகாரத்திற்குள்ளேயே வைத்திருக்க போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten