தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும்: தமிழக முதல்வர்!!

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 121 பேர் கடற்படையினரால் கைது! யோகேஸ்வரன் பா.உ. அவுஸ்திரேலியா பயணம்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 06:35.09 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன், படகு ஒன்றனையும் கைப்பற்றியுள்ளனர்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுத்தில் தரித்து நின்ற படகு ஒன்றில் இருந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து வந்த படகு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட படகு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 116 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சென். பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 59 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவுஸ்திரேலியா பயணம்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று வியாழக்கிழமை அவுஸ்ரேலியா பயணமாகவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான இவர் பயணமாகவுள்ளார்.
சிட்னி மற்றும் பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகளில் எதிர்வரும் 10ம் திகதி வரை கலந்து கொண்டு பின்னர் நாடு திரும்பவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும்: தமிழக முதல்வர்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 06:35.17 AM GMT ]
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 01.08.2013 வியாழக்கிழமை ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது சிங்கள கடற்கடையினரால் இரக்கமின்றி கொடூரமாக தாக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டனர்.
தற்போது அவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கொடூரமாக தாக்குவது, அடித்து காயப்படுத்துவதும், கடத்தி செல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருதை நான் மீண்டும், மீண்டும் உங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து வருகிறேன்.
கடந்த 15.6.2013 அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 8 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை கடத்தி சென்று மன்னார் நீதினமற்த்தில் ஆஜர்படுத்தி சிறை வைத்துள்ளதை நான் 17.6.2013 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
8 ராமேசுவரம் மீனவர்களையும் 27.6.2013 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு அவர்களது காவல் 25.7.2013 வரை நீட்டிக்கப்பட்டு, அவர்கள் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது அந்த 8 பேரின் காவல் 6.8.2013 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளில் 6.7.2013 அன்று மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படை வீரர்களால் கடத்தி செல்லப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை அனுராதபுரம் சிறையில் 19.7.2013 வரை காவலில் வைக்க உத்தர விடப்பட்டது. இந்த சம்பவம் பற்றி நான் உங்களுக்கு 8.7.2013 அன்று ஒரு கடிதம் எழுதினேன். தற்போது அந்த 21 மீனவர்களின் காவல் 2.8.2013 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
அந்த மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 4.7.2013 மற்றும் 17.6.2013 ஆகிய திகதிகளில் உங்களுக்கு நான் எழுதிய கடிதங்களில் 5 அப்பாவி தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டு, பொய் வழக்குகள் போடப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் அவதிப்பட்டு கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துயரங்கள் பற்றி நான் மீண்டும், மீண்டும் கடிதம் எழுதியுள்ள போதிலும் மத்திய அரசு, அவர்களை விடுவிக்க எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அப்பாவி மீனவர்கள் சமூதாயத்தில் மிகவும் ஏழ்மையான பிரிவில் இருப்பவர்கள். அவர்களை இப்படி நீண்ட நாட்கள் சிறையில் வாட விடுவது அவர்களது வாழ் வாதாரத்துக்கே இழப்பை ஏற்படுத்தும். அவர்களை பிரிந்து தவித்து கொண்டிருக்கும் மீனவர்களின் குடும்பத்திலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுவதை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மீனவ சமுதாயத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கும் ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தூதரக உயர் அதிகாரிகள் மூலம் நம் மீனவர்களை மீட்க உரிய உறுதியான நடவடிக்கைகளை உடனே விரைந்து எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்களே நேரில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten