[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 04:59.30 AM GMT ]
கல்வித்துறைக்குள் ஒழுக்கம் பேணப்படாமைக்கு அரசியல் வாதிகளே காரணம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடுகளால் கல்வித்துறை இன்று பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதொன்றாகிவிட்டது.
சுதந்திரக் கல்வித்துறையானது, கூட்டுத்தாபனமாகவும் நிறுவனமாகவும் பின்னர் அரசியல் மயமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் கல்வித்துறை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
இதன்காரணமாகவே, அரசியல்வாதிகளால் ஆசிரியர்களை மண்டியிடச் செய்யும் நிலைவரை அது கொண்டு சென்றுள்ளது.
எனவே, கல்வித்துறைக்குள் அரசியல் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாடசாலை மற்றும் கல்வி என்னும்போது ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனினும் அதனை இங்கு காணமுடியாதிருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் கல்வித்துறைக்குள் இருந்து விடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றப்போவதாக கூறி பாரிய கட்டிடங்களை அமைப்பதால் நிறைவேறி விடப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
தென் மாகாண அமைச்சர் கைது!- தெஹிவளை வர்த்தகரிடம் 15 லட்சம் கப்பம் பெற முயன்ற இருவர் கைது
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 05:39.00 AM GMT ]
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதியை தாக்கியதாக அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
தங்காலை பஸ் டிப்போவில் பணியாற்றி வந்த சாரதியையே அமைச்சர் தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய அமைச்சர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தெஹிவளை வர்த்தகரிடம் 15 லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த இருவர் கைது
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த கோடிஸ்வரான வர்த்தகர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெறுவதற்கு முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மாதிவல பெத்தகான பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
29 மற்றும் 33 வயதான இந்த சந்தேக நபர்கள் 19 குற்றச் செயல்கள் தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையானவர்கள் என பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் தெஹிவளை வர்த்தகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது பிள்ளைகளை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி கப்பம் கேட்டுள்ளனர்.
முதலில் வர்த்தகரை மகரகமவுக்கு வரவழைத்த சந்தேக நபர்கள் பின்னர், பெத்தகான பிரதேசத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
வர்த்தகருடன் மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து கைக்குண்டும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten