தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

நவநீதம்பிள்ளையைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐ.நாவிடம் சரத் பொன்சேகா கோரிக்கை!

வெளிநாட்டு படையதிகாரிகளுக்கு இலங்கையில் பயிற்சி! -வர்த்தக பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் சென்றவர்கள் சென்னையில் தடுக்கப்பட்டனர்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 06:39.32 AM GMT ]
இலங்கையின் பாதுகாப்பு கட்டளை மற்றும் இராணுவ கல்லூரிகளில் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முப்படையினர், பொலிஸ் துறைகளில் மத்திய மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரிகளின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள அதே தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்க சந்தர்ப்பம் அளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இலங்கைக்கு வர்த்தக பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சித்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
இந்தியாவில் இருந்து வர்த்தக பொருட்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முயற்சித்த 50 பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் சுற்றுலா வீசா அனுமதியில் சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்தனர்.
இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனவும் இவர்கள் சென்னையில் உள்ள பர்மா பசார் பகுதியில் புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை இலங்கைக்கு எடுத்துச் செல்லவிருந்தனர்.
சாதாரண பயணிகள் பொதிகளில் வர்த்தக பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என தெரிவித்துள்ள அதிகாரிகள், இவர்கள் கொழும்பு சென்று திரும்பும் போது தங்கத்தை கடத்தி வரலாம் என சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சுங்க கட்டணங்களை செலுத்திய பின்னர் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நவநீதம்பிள்ளையைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐ.நாவிடம் சரத் பொன்சேகா கோரிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 07:19.10 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள மோசடியான அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
யுத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக சில பிரச்சினைகள் எழுந்துள்ளது.
எனவே போரை வழிநடத்தியவன் என்ற முறையில், அது குறித்து சரியான பதிலை தன்னால் மாத்திரமே வழங்க முடியும் எனவும் இதனால் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படாதது பிரச்சினைக்குரியது.
இராணுவத்தில் உள்ள மோசடியான அதிகாரங்களை பயன்படுத்தி அரசாங்கம், வடக்கில் அரசியல் நடத்தி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten