[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 06:44.36 AM GMT ]
யாழ். செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இம்முறை வாக்குகள் யாழ். செயலகத்தில் வைத்து எண்ணப்படமாட்டாது என்றும் இது குறித்து இடம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ். மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும் என யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் யாழ். அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ்.மத்திய கல்லூரியில் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா தாக்குதல் சம்பவம்! சாட்சியமளிக்க வருமாறு மக்களுக்கு நீதிமன்றம் அழைப்பு! அமெரிக்கா கரிசனை
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 07:46.40 AM GMT ]
சம்பவ இடத்தை பார்வையிட்ட நீதவான், சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை வழங்க பிரதேச மக்களை எதிர்வரும் 08ம் திகதி நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நேற்று வெலிவேரிய நகரில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நேற்று வெலிவேரிய நகரில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டகார்களை அப்புறப்படுத்த பொலிஸாரும், இராணுவத்தினரும், கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல், ரப்பர் குண்டு தாக்குதல் நடத்தியதுடன் பொல்லுகளாலும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பிரதேசவாசிகளும் பாதுகாப்பு தரப்பினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
பிரதேசத்தில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய கண்டி வீதியின் வெலிவேரிய பிரதேசம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இன்று காலை வரை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
கம்பஹா சம்பவம் குறித்தும் அமெரிக்கா கரிசனை
கம்பஹா, வெலிவேரியவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா தனது கரிசனையை செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
தெரணியகலை நூரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்க தனது கரிசனையை செலுத்துவதாக அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten