[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 06:21.05 AM GMT ]
வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ் மக்களை மௌனிளாக்க முயற்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இந்த அரசாங்கம் உயர் பதவிகளில் நியமித்துள்ளதுடன் அரசியலிலும் ஈடுபடுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட பகுதி மக்களுக்கு துரோகம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
விக்னேஸ்வரன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அவரை எமது கட்சியும் மக்களும் ஏகமனதான சம்மதத்துடன் தேர்தலில் களம் இறக்கியுள்ளோம்.
எமது மக்களின் காணிகளை திட்டமிட்டு பறித்து அதில் சிங்கள குடியேற்றங்களை செய்த அரசாங்கம், மக்களை ஏமாற்றுவதற்காக காணிகளை மீண்டும் வழங்குவது போல் பாசாங்கு செய்து வருகிறது.
தேர்தலில் வெல்லும் வரை மாத்திரமே அரசாங்கம், அபிவிருத்தி, அடிக்கல் நாட்டு விழா, மின்சாரம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த விடயத்தை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த விடயத்தை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இதனால் வடக்கு மாகாண தேர்தலை சாதாரணமான தேர்தலாக கருதாது, எமது இனத்தின் விடுதலைக்கான தேர்தலாக நினைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
இதன் மூலம் வட பகுதி மக்களுக்கு கூட்டமைப்பு துரோகம் செய்ததாக கூறும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே குழு மோதல்!: யாழ் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 05:58.56 AM GMT ]
மாணவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தில் சில கட்டடங்களுக்கும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி மதியத்துடன் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten