50 முன் நாள் புலிகள் மகிந்தர் கட்சியில் இணைந்து போட்டியிட விரும்பினார்கள் !
01 August, 2013 by admin
'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் போராளிகள் பலர் விண்ணப்பித்திருந்த போதும் நேர்முகத் தேர்வுக்கு சமூகம் தராததால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.
யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்றார்.
யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்றார்.
ஷாப்பிங் சென்ரரில் "பிறாவை" எறிந்த மாலக சில்வா: திடுக்கிடும் சம்பவம் !
01 August, 2013 by admin
அவர்கள் உடனே தமது பொலிஸ் தலைமை நிலையத்துக்கு தகவலை வழங்கியிருந்தார்கள். அதனால் மேலதிக பொலிசார் அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் அதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக மாலக சில்வாவும் அவரது பாடிகாட் சின்ஹாவும் வெளியே வந்துள்ளார்கள். சின்ஹா கார்பார்க் செல்லும் வழியில் அவரை கோழி அமுக்குவதுபோல அமுக்கி காரில் போட்டார்கள், திச வின் ஆட்கள். இதன் பின்னரே தான் தனியாக நிற்பதை உணர்ந்தார் மாலக சில்வா. பின்னர் அவரும் கார் பார்க் நோக்கிச் சென்றுள்ளார். அங்கே காத்து நின்ற திச மற்றும் 3 நபர்கள் மாலக சில்வாவை தாக்கியுள்ளார்கள். இவர்களிடம் இருந்து விடுபட்ட மாலக சில்வா ஓடிச் சென்று, தனது காரில் இருந்த "ரம்போ ஸ்டைல் கத்தி" ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடிவந்துள்ளார். ஆனால் அங்கே நிற்பது மகிந்தரின் பிரத்தியேகப் பாதுகாப்பு பிரிவு என்று அவருக்கு தெரியாது. அவர்களிடம் பிஸ்டல் கூட இருந்திருக்கிறது. அதனை எடுத்து மாலக சில்வா மீது சுட அவர்களுக்கு சில நொடிகள் போதும். ஆனால் மாலக சில்வாவுக்கு ஒரு பாடம் புகட்டவே அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.
தனக்கு முன் நிற்கும் நால்வரும் யார் என்று தெரியாது, மொக்குத்தனமாக கத்தியைக் எடுத்துக்கொண்டு ஓடிவந்துள்ளார் மாலக சில்வா. கத்தியுடன் ஓடிவந்த மாலக சில்வாவை மடக்கி பிடித்த அந்த நால்வரும் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி, அவர் முகத்தில் மற்றும் வாயில் வெட்டியுள்ளார்கள். இதேவேளை பல பொதுமக்கள் இச் சண்டையை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இச் சிங்களவர்கள் போதும் போதும் சண்டையை நிறுத்துங்கள் என்று கத்தியுள்ளார்கள். பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்து வருவது, குறித்து திச வுக்கு தகவல் கிடைக்கவே அவர் விரைந்து சென்று ஓடல் ஷாப்பிங் சென்ரரில் இருந்த காவலாளியிடம் ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர்களது காரில் இருந்த மாலக சில்வாவின் பாடிகாட்டை, ஓடலுக்கு சற்று தொலைவில் வைத்து, காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு திச வின் குழு சென்றுவிட்டது.
சில நிமிடங்களில் எல்லாம், ஓடல் ஷாப்பிங் சென்டருக்கு உள்ளே இருந்த மற்றும் கார் பார்க்கில் உள்ள CCTV கமராக்கள் பதிவுசெய்த அனைத்து காட்சிகளும் (கேசட்டுகளும்) அழிக்கப்பட்டு விட்டது. இதனால் பொலிசாரின் கைகளில் எதுவும் சிக்கவில்லை. CCTV கமராக்கள் அன்றைய தினம் கோளாறு காரணமாக இயங்கவில்லை என நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இவை அனைத்தும் மேர்வின் சில்வாவுக்கு தெரியும். இருப்பினும் எவரும் வாய் திறக்க முடியாது. பொலிசாரும் இது தொடர்பாக அமுக்கிவாசிக்கவேண்டி உள்ளது. வேறு வழியில்லை. இதுதான் நடந்த உண்மைச் சம்பவம்.
Geen opmerkingen:
Een reactie posten