[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 03:05.18 AM GMT ]
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியான லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
20வது இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது.
புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவரான தயா ரத்னாயக்க, ரக்பி மற்றும் தடகள விளையாட்டுகளில் திறமை காட்டியவராவார்.
இதேவேளை, நேற்றையதினம் பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்புப் படைகளின் தளபதியாகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு உத்தரவு
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:38.57 AM GMT ]
அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று தேர்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சில முக்கிய கட்சிகள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ள காரணத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் வாகனத் தொடரணியாக செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து திரும்பிச் செல்ல வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.
வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலானவர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு இன்று விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten