தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

மூதூர் 17 பணியாளர் கொலை தொடர்பில் நீதியான விசாரணை இல்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 03:52.52 AM GMT ]
மட்டக்களப்பு, கிரான் தெற்கு பிரதேச சபை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது என ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஜுனைட் நளீமி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிரான் பிரதேச செயலகத்துடன் அலுவலக நடவடிக்கைக்காக தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளை புதிதாக அமையவுள்ள கிரான் பிரதேச சபையுடன் இணைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக தற்காலிக ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு பொதுமக்களது அபிப்பிராயங்களை கோரியுள்ளதுடன் அறிக்கையினையும் தயார்படுத்தி வருகின்றது.
இந்த ஆணைக்குழுவில் பிரதேச நிர்வாக பிரிவிற்குற்பட்ட எவ்வித முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படாமை திட்டமிட்ட ஒரு புறக்கணிப்பாக அமைந்துள்ளது.
இந்த கிராம சேவகர் பிரிவுகளில் பெரும்பான்மையாக முஸ்லிம்களே காணி உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமல் அமையப்பெறும் எத்தகைய தீர்வு முயற்சியும் இனங்களுகிடையே பாரியய விரிசலை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எனவே குறித்த பிரதேச சபை அமைத்தல் மற்றும் காணி பகிர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமைந்துள்ள கொமிஷனில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படக் கோரியும் நீதிமன்றதில் வழக்குத் தாக்கல் செய்வது என ஓட்டமாவடி பிரதேச சபையில் நேற்று புதன்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூதூர் 17 பணியாளர் கொலை தொடர்பில் நீதியான விசாரணை இல்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 03:40.03 AM GMT ]
திருகோணமலை மூதூரில் கொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றக்கரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கை தலைமையமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று தமிழர்களாகிய 17 பேர் மூதூர் எக்சன் பெய்ம் நிறுவன அலுவலக சூழலில் வைத்து கொல்லப்பட்டனர். இதில் 4 பெண்களும் அடங்கியிருந்தனர்.
விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடு;ம் மோதல்களின் பின்னரே இந்த கொலைகள் இடம்பெற்றிருந்தன

இந்தநிலையில் சர்வதேசத்துக்கு ராஜபக்ச அரசாங்கம் நல்ல எலும்புத்துண்டுகளை வீசியுள்ள போதிலும் குறித்த மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படப்படவில்லை என்று கண்காணிப்பகத்தின் கொள்கை பண்pப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தமது உறவுகளை இழந்தவர்கள் இன்னும் நீதிக்காக ஏங்கி நிற்பதாக ஜேஸ்ம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலைகள் தொடர்பில் அரசாங்க படையினர்மீது குற்றச்சாட்டுக்களை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை மற்றும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு விசாரணை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது.
இது உண்மையான முன்னெடுப்பாக இருக்காது.
எனவே இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்காக சர்வதேசமே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten