தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராதனை பல்கலை. மாணவன்- மாணவியின் உடல் பாகங்கள் காட்டுப் பகுதியிலிருந்து மீட்பு
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:25.38 PM GMT ]
பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் உடல் பாகங்கள் அக்குரஸ்ஸ வில்பிட வனப் பகுதியில் இருந்து இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்கள் கிடைந்த இடத்தில் இருந்து கிடைத்த தேசிய அடையாள அட்டைகள் மூலம் உயிரிழந்தவர்கள் 23 வயதான கிஷான் சஜித் மற்றும் 26 வயதான திலினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 01:42.50 PM GMT ]
மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலையின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காகித ஆலையின் செயற்பாடுகளை முடக்கி இந்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இலங்கையில் அரச கூட்டுத்தாபனங்களில் மிகவும் பழமை வாய்ந்த கூட்டுத்தாபனமாக வாழைச்சேனை காகித ஆலை உள்ளது.
கடந்த காலத்தில் இயங்காத நிலையில் பிரதேச அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக இயங்கிவந்தது.
எனினும் கடந்த இரண்டு மாதகாலமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் பல்வேறு தரப்பினருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
எனினும் இதுவரையில் எதுவித தீர்வும் வழங்கப்படாத நிலையில் இன்று ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten