தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அமைச்சர் பசில் சந்தித்து பேச்சு

வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த சடலங்கள்: பிரான்ஸ் செனட்டரிடம் மகிந்த தெரிவிப்பு
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:00.20 PM GMT ]
வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்து தற்பொழுதுள்ள நிலைமைகளை நேரடியாக கண்டறிய வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் செனட்டர் நத்தாலி கௌலட் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனை கூறினார்.
மோதல்கள் உக்கிரமாக நடைபெற்ற போது தினமும் வடக்கில் இருந்து தென் பகுதிக்கு சடலங்கள் வந்தன. முழு நாடும் பயங்கரவாத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் நாட்டின் நிலைமை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளினால் அழிக்கப்பட்ட அனைத்தையும் அரசாங்கம் புனரமைத்து வருகிறது.
போருக்கு பின்னர் தென் பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்கு பெரும் தொகை பணம் செலவிடப்படவில்லை. ஆனால் வடபகுதியின் வளர்ச்சிக்கு பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.
இங்கு கருத்து வெளியிட்ட பிரான்ஸ் செனட்டர் கௌலட்,
இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்படும்.
சில நாடுகளும் குழுக்களும் கீழ் மட்டத்தில் இருந்து உண்மைகளை அறியமால் பிற நாடுகள் தொடர்பிலான தமது கருத்துக்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளன.
இலங்கை அழுத்தமாக தனது முன்னைய கதைகளை சர்வதேசத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும் என்றார்.
பிரான்ஸின் ஓரன் நோர்மண்டி செனட்டரான கௌலட், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்களின் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை ஆராயும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரது விஜயத்தின் முதல் இரண்டு நாட்களில் அவர் யாழ்ப்பணம், திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விஜயம் செய்ததுடன் அனுராதபுரத்திற்கும் விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அமைச்சர் பசில் சந்தித்து பேச்சு
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 01:28.23 PM GMT ]
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரொக்கின் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணி வெடிகளை அகற்று பணிகளின் முன்னேற்றம், மீள்குடியேற்றம், வடபகுதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் முன்னேற்பாடுகள், மாநாட்டின் வழியாக இலங்கைக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் சம்பந்தாகவும் இருவரும் கலந்துரையாடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை தவிர வடக்கில் பிரித்தானிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், புதிய முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரியான டேனியல் ஜென்டரும் கலந்து கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten