[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 12:19.05 PM GMT ]
இவ்விடயம் பற்றி மேலும் தெரிவருவதாவது,
இன்று தமிழ் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையாகும். வழக்கம்போல் வீச்சுக்கல்முனை வித்தியாலயத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
விடுமுறை தினம் ஆகையால் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டுடிருந்தனர். இவர்களைக் கண்ணுற்ற வித்தியாலய அதிபர், மாணவர்களை அழைத்து அவர்களின் கால்களில் தடியினால் சராமாரியாகத் தாக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் எழுதும் மாணவர்களாவர்.
மாணவர்கள் அனைவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்று நடந்தவற்றினை பெற்றோரிடம் கூறி தமது கால்களை காண்பித்துள்னர்.
தமது பிள்ளைகளின் கால்கள் வெடித்திருப்பதனை அவதானித்த பெற்றோர், அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமத்தித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்த பகுதியில் பலத்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசியாவில் அதிகளவிலான இராணுவம் நிலை கொண்டுள்ளமை இலங்கையின் வடக்கு பிரதேசமே!- கீர்த்தி தென்னகோன்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 09:26.13 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு மிகவும் அதிகளவிலான இராணுவத்தினர் உள்ளனர்.
சரியாக கணக்கிட்டு பார்த்தால் ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடக்கு பிரதேசத்தை கருத முடியும்.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாக பணிகளில் ஈடுபடுகிறது. அது பொருட்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது.
வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்த பணிகளில் இருந்து விலக்கி வைக்காமல் தேர்தலை நடத்துவது எந்த வகையிலும் நேர்மையானதல்ல.
எனினும் செயற்பாடுகளை வரையறுக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது. நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ளது போல், பொலிஸாருக்கு சிவில் பணிகள் வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்கு தற்காலிகமாவோ, குறுகிய காலத்திற்கோ தீர்வு காணமுடியும்.
வடக்கில் தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை தெளிவாக உள்ளது. காரணம் யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டத்தை நாம் பார்த்தோம்.
ஆனால் தெற்கில் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் அரசியல் சுதந்திரம் வடக்கில் உள்ளது என்று கூறமுடியாது.
எனினும் கடந்த காலங்களில் பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அகதி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான முன்னேற்றமான பல விடயங்கள் நடந்துள்ளன.
இதனால் தேர்தல் நடத்தக் கூடிய தெளிவான சூழல் அங்கு காணப்படுகிறது. முன்னார் காணப்பட்ட கண்ணிவெடி அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் என அனைத்தும் நீங்கியுள்ளன.
மாகாண சபை தேர்தலை நடத்த தேவையான அடிப்படை கட்டமைப்புகள் சிறந்த முறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
எனினும் அதில் மற்றுமொரு இருள் சூழ்ந்த பகுதிதான் அரசியல் சுதந்திரம். அது வடக்கில் இருக்கின்றதா என்பதை பல கோணங்களில் பல துறைகளில் விவாதிக்க முடியும்.
குறிப்பதாக ஊடக சுதந்திரம் இருக்கின்றதா?. பேச்சு சுதந்திரம் இருக்கின்றதா?. அரசியல் என்பது தாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு. தாம் ஏற்றுக்கொண்டதை நாம் நம்புவதை பிறருக்கு கூறும் சுதந்திரம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten