தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியது?

வெலிவேரிய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது!- ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 11:29.03 AM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய சம்பவத்தில் 16 வயதான கஹந்தவ ஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரும், வைத்தியசாலை தரப்பினரும் சரியான தகவல்களை வழங்குவதில்லை.
தமது உறவினர்கள், பிள்ளைகள் வீடுகளுக்கு வரும் வரை பிரதேச மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
அந்த பிரதேசத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு பின்னர், வீட்டில் இருந்தவர்கள் வீதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
ரத்துபஸ்வல மக்கள் குடிக்க குடிநீர் கேட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அன்றாட பவணைக்காகவும் குடிக்கவும் அவர்கள் சுத்தமான தண்ணீரை கேட்டனர்.
தண்ணீர் கேட்ட மக்களுக்கு அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக துப்பாக்கி, பெட்டன் பொல்லுகள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலளித்தது.
போராட்டம் நடத்திய மக்களின் கை, கால்களை உடைத்து இறுதியில் கொலை செய்துள்ளது.
இராணுவம் நடத்திய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலையும் கொலையையும் ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கின்றது.
அத்துடன் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறது என்றார்.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியது?
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 08:50.12 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரியிருந்த பொலிஸ் ஊடகப் பிரிவின் முன்னாள் பேச்சாளரும் இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடிக்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அவர் பொலிஸ் அதிகாரி என்பதாலும், அவரது மகன் அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று அங்கு வசித்து வருவதாலும் அவருக்கு அரசியல் புகலிடம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இரத்தினபுரிக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய பிரசாந்த ஜயகொடி அவுஸ்திரேலியாவில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக விடுமுறையில் அங்கு சென்றிருந்தார்.
கடந்த 10 ஆம் திகதி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப வேண்டிய அவர், பணிக்கு திரும்பவில்லை. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் திரும்பபெறப்பட்டதுடன், அவர் பணியில் இருந்து விலகி விட்டதாக தீர்மானித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.
பிரசாந்த ஜயகொடி பொலிஸ் பேச்சாளராக இருந்த போது, ஊடகங்களுக்கு வெளியிட்ட சில கருத்துக்கள் காரணமாக அவருக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இதனை காரணமாக வைத்தே அவர் அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரியிருந்தார்.
தொடர்புடையவை

Geen opmerkingen:

Een reactie posten