தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்!
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 12:00.15 AM GMT ]
சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக அரச தகவல் திணைக்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தேவா சதீஸ்குமார் என்கின்ற 35 வயதுடைய முன்னாள் புலி உறுப்பினராக இருந்த இளைஞனே இவ்வாறு மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் விமானம் மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்ததாக அவர் தெரிவித்த போதும் அவர் படகு மூலமே இந்தியா சென்றிருந்தமை விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே அவர் நாடு கடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதாக மும்பை குற்றத்தடுப்பு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதாக மேலும் இந்த இணையம் தெரிவித்துள்ளது.
காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 12:08.33 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லச்மன் கதிர்காமர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமரின் மகனான எஸ் ஜே கிறிஸ்டியன் கதிர்காமர். தமது மனுவில் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், யாழ்ப்பாண காணி அதிகாரி ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் ஏற்கனவே இலங்கையின் சுற்றாடல்துறை ஆலோசகராக 1995ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் தமது உறவினர்களான ராஜநாதன் கதிர்காமர், செல்வநாதன் கதிர்காமர் ஆகியோர் இராணுவத்துறையில் சேவை ஆற்றியதை மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம்,  வலிகாமம் வடக்கு பிரதேச தெல்லிப்பளை, மாவிட்டபுரம் ஆழ்வார் மலையடியில் கீரிமலைக்கு அருகில் அமைந்துள்ள தமது காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு அதனை தடுத்து நிறுத்துமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten