[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:08.52 AM GMT ]
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரியும், தற்போது கண்டி நகரில் கணக்கீடு, வணிக கல்வி ஆசிரியராக பணியாற்றுபவருமான, வேலு குமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளராக யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
நுவரெலியா மாவட்ட மஸ்கெலிய புனித. ஜோசப் கல்லூரியில் பயின்று கணனித்துறை கற்கை நெறியை கற்றவரும், தற்போது அம்பகமுவ பிரதேச சபையில் ஜமமுயின் உறுப்பினராக பணியாற்றிவருபவரான ராஜ்குமார் மற்றும் பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி கலை பட்டதாரியும், சிறிபாத கல்வியியல் கல்லூரியின் தேசிய கற்பித்தல் டிப்ளோமா கற்கைநெறியை பயின்றவரும், தற்போது சமூக விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றிவருபவரான சந்திரகுமார் ஆகிய இருவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களாக யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும்!
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:16.33 AM GMT ]
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டையொட்டிய ஆரம்ப விழா நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அவரது பிறந்த தினத்தின் நூறாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுமுகமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம், அருட்தந்தை ஏ.நவாஜி உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் நூற்றாண்டு விழாச் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தனிநாயகம் அடிகளாரின் உருவப்படம் விழா மண்டபத்தில் வைக்கப்பட்டு அவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் இவரின் நூற்றாண்டு விழா மட்டக்களப்பில் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten