தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

கொள்கைக்கு விரோதமாக சரணடைந்து தூக்குக்கு காத்திருக்கும் புலிவீரர் மனம் பற்றி அவர்கள் வால்கள்!!

சயூராவை தகர்த்த 6 புலிகள் கொழும்பில் !
01 August, 2013 by admin


அவர்கள் தாக்குதலால் உடனடியாகவே சயூராவில் இருந்த 3 கடற்படையினர் காயமடைந்தனர். இதனையடுத்து சயூராவை சற்று தொலைவுக்கு நகர்த்திய இலங்கை கடற்படையினர், அதில் உள்ள படு பயங்கரமான போஃர் போஸ் பீரங்கியை இயக்கி MV கொய்மர் கப்பலை குறிவைத்து தாக்கினார்கள். இ
தனால் புலிகளின் MV கொய்மர் கப்பல் தீ பற்றி எரிந்தது. இருந்தபோதிலும் புலிகளின் தாக்குதல் முடிந்தபாடாக இல்லை. இச் சமர்தொடர்பாக சிங்கள அதிகாரி ஒருவர் நேற்றைய தினம் சாட்சியமளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், தாம் புலிகளின் கப்பலை தாக்கியவேளை அதில் இருந்த எவரும் கடலில் குதித்து தப்ப முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார். அது தமக்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதில் இருந்த புலிகள் தமது கப்பலோடு கடலில் மூழ்கி இறக்கவே விரும்பினார்கள். தமது கப்பல்- அது மூழ்கினால் தாமும் மூழ்குவோம் என்பதே அவர்கள் கொள்கையாக இருந்தது. The LTTE could have easily surrendered to SLNS Sayura and come along with it to Trincomalee, he said. "Once they had fired at us, we targeted the ship with maximum firepower at our disposal," Commander Pathiraja said, adding that as the LTTE tanker was sinking SLNS Sayura intercepted a message originating from the sinking vessel. "One of those men on board the sinking ship vowed to take revenge. It was a chilling communication. 

இதேவேளை அதிவேக தாக்குல படகுகள் இரண்டு, சமர் நடக்கும் கடல் பகுதிக்கு வந்துசேர்ந்தது. அதுவும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான தாக்குதல் படகுதான். அதில் பொருத்தப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கி மூலம் அவர்கள் புலிகளின் கப்பலின் கீழ் பகுதியில் சுட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் தான் எரிந்துகொண்டு இருக்கும் அக் கப்பல் விரைவாக நீரில் மூழ்கும். இவ்வாறு பல முறை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் புலிகளின் MV கொய்மர் கப்பல் படுவேகமாக நீரில் மூழ்க ஆரம்பித்தது. அப்போது தான் அதில் இருந்து சில தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது வன்னித் தலைமைக்கு அனுப்பப்பட்ட இறுதி செய்தியாகும். புலிகளின் MV கொய்மரில் இருந்த இளைஞன் ஒருவனின் குரல் ஓங்கி ஒலித்தது. எமது கப்பல் மூழ்கப்போகிறது. " ஆனால் சயூராவை நாம் மூழ்கடிக்காமல் விடமாட்டோம்" என்று வலுவான குரலில் செய்தியை அனுப்பினார்கள் அக் கப்பலில் இருந்த புலிகள். இதனை இடைமறித்துக் கேட்ட சயூராவில் இருந்த கொமாண்டர் பற்றிராஜ் திண்டாடிப்போனார். இனி புலிகள் தமது கப்பலை குறிவைப்பார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். 

அதேபோல 2006ம் ஆண்டு சயூரா கப்பல் தரித்து நிற்கும் இடத்துக்கு அருகாமையில் வைத்து சயூரா கப்பல் மீது புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள். மோட்டார் மற்றும் ஆர்.பி.ஜி கனரக ஆயுதங்கள் கொண்டு தொடுக்கப்பட்ட இத் தாக்குதலில் பாரிய சேதம் அடைந்த சயூரா போர் கப்பல், இறுதியாக கடலில் மூழ்கியது. இத் தாக்குதலுடன் தொடட்புடையவர்கள் என்று கூறி, சுமார் 6 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை இலங்கை புலனாய்வு கைதுசெய்துள்ளது. சில வருடங்களாக அவர்களை தடுப்புக் காவலில் வைத்திருந்த இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நேற்று முந்தினம் சட்டமா அதிபருக்கு சில தகவல்களை வழங்கியிருந்தார்கள். அதற்கு அமைவாகவே அவர்கள் மீது தற்போது குற்றஞ்சுமத்தப்பட்டு அவர்களை நீதிமன்றச் சிறையில் இருந்து வெலிகடைச் சிறைக்கு மாற்றுமாறு, நேற்று(புதன்கிழமை) கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இலங்கை கடற்படையினர், புலிகளின் கப்பல்களை அப்படி மூழ்கடித்தார்கள்... இப்படி மூழ்கடித்தார்கள் என்று செய்திவெளியிடும் ஊடகங்கள் இச் செய்தியை அறிந்துகொள்வது அவசியம். 

ஒரு போர் கப்பலுக்கும், கண்டேனர் கப்பலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அம்பு வில்லுடன் இருக்கும் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவது போன்றது. புலிகளின் ஆயுதக் கப்பல்களில் கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன் அப்படி பொருத்தவும் முடியாது. அப்படியான கப்பல்களையே இலங்கை கடற்படை தாக்கி அழித்துள்ளது. ஆனால் அவர்கள் மனத் தைரியத்தை எவராலும் தாக்கி அழிக்க முடியாது !

Geen opmerkingen:

Een reactie posten