[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:03.32 PM GMT ]
யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களை மூடிவிட்டு அப்பகுதியில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் வெளியேறிச் செல்லவுள்ளன.
இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் படைமுகாம்களே இவ்வாறு மூடப்படவிருக்கின்றன. இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 511வது பிரிகேட் படைமுகாம் மற்றும் 512வது பிரிகேட் படைமுகாம்களே மூடப்பட்டு அப்படைமுகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன.
இந்த படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வீடுகளும் காணிகளும் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.
இதற்கான நடவடிக்கைகளை படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 511வது, 512வது படைமுகாம்கள் அமைந்திருந்த வீடுகள் குறித்த பிரிவு இராணுவ அதிகாரிகளால் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.
இதன்படி 511வது படைமுகாம்கள் இருந்த ஊரெழு, அச்செழு பகுதி பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
512 வது படைமுகாம்கள் இருந்த கொழும்புத்துறை, சுவாமியார் வீதி மற்றும் அரியாலை பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் அரியாலையிலுள்ள 512வது படைமுகாமிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது பீச்பார்க் திட்டத்திற்கு பொலிஸார் தடை ஏற்படுத்தக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:57.05 PM GMT ]
கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தரின் முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை பொலிசாரினால் பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு எதிர்வரும் 29.08.2013 திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நகர்வு மனு அனைத்து திறந்த மன்றில் இன்று அழைக்கப்பட்டு, சட்டத்தரணி மூலம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்து மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்தபோது மேற்கண்ட தீர்ப்பு நீதவான் நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.
குறித்த பீச் பார்க் கட்டுமானத்திற்கு பொலிசார் எந்தவித தடைகளையும் விதிக்கக் கூடாது எனவும் பொலிசார் தடைகளை விதிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தமாறும் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten