[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:38.59 AM GMT ]
பிரதேச அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பிலான சகல தகவல்களும் கிடைக்கப்பெறுகின்றன.
ஜனாதிபதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பத்து பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்தத் தகவல்களை எனக்கு வழங்குகின்றனர்.
திருந்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில் நான் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றேன்.
எதிர்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயல்களில் ஈடுபடாது கிராம மக்களின் இதயங்களை வென்றெடுக்க அரசியல்வாதிகள் பழகிக்கொள்ள வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய பெயர் விபரங்களை வெளியிட விரும்பவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்த போத ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி படையணியைச் சேர்ந்த 10 பேருக்கு சிறைத்தண்டனை
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 05:41.51 AM GMT ]
குறித்த 10 பேருக்கும் நான்கரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகர்களான ரூகாந்த குணதிலக்க சந்திரலேக தம்பதியினரை அச்சுறுத்தி தாக்கிக் கொள்ளையிட்டதாக குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ரூகாந்த, சந்திரலேக தம்பதியினருக்கு இருபது லட்ச ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாணந்துறை நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten