வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஏற்கனவே அறிவித்தபடி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அனுராதபுரத்திலுள்ள விகாரையொன்றிலேயே ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கான அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் முதன்மை வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இழுபறி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
தமிழரசுக் கட்சியினரால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் முதன்மை வேட்பாளர் இடத்திற்கு கண் வைத்திருக்கின்ற இத்தருணத்தில் தமிழரசுக் கட்சியினரின் இம்முயற்சி கூட்டமைப்பினுள் மேலும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் கபடத்தனத்தை உணர்ந்து கொண்ட முன்னாள் நீதியரசர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஐந்தும் ஒன்றிணைந்து ஏகமனதாக தன்னிடம் முதல்வேட்பாளர் என்ற கோரிக்கையை முன்வைத்தால் அதனை தான் பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவிதுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் வட மாகாண சபையின் முதலமைச்சருக்கு பொருத்தமானவர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைபின் 5 கட்சிகளிலும் இல்லை என்பதை கட்சிக்கு வெளியேயிருந்து ஒருவரை கொண்டுவர மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி ஊர்ஜிதம் செய்துள்ளது.
மாணவருக்கு வேண்டுமாம் பால்! தேவையாம் 40 கோடி!
கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவதற்காக ரூபா 40 கோடி (40,31,85,600) பணத்தொகையை ஒதுக்குமாறு வேண்டியுள்ளார்.
முதல் கட்டமாக 1,143பாடசாலைகளிலுள்ள 2,23,992 மாணவர்களுக்கு ஆளுக்கு ஒரு பாற்குவளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு குழுவினரின் ஒத்துழைப்புடனும் மேற்பார்வையுடனும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுகாதாரப் பிரிவினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும்.
தெரிவு செய்யப்படுகின்ற பாடசாலைகளிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தினந்தோறும் 150 மில்லி லீற்றர் பால் வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் மாணவரொருவருக்கு ரூபா 60 ஐச் செலவிட வேண்டியேற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten