தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

லண்டனில் மீண்டும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ – சிறிலங்காவுக்கு கலக்கம் !


லண்டனில் மீண்டும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ – சிறிலங்காவுக்கு கலக்கம்

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள போர் தவிர்ப்பு வலயம் என்ற 90 நிமிட ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது சிறிலங்கா அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் புயலைக் கிளப்பியது.
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது.
இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் தரையிடப்படவுள்ளது.
அதையடுத்து கேள்வி – பதில் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
இது கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten