தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை நடாத்துவது குறித்து லண்டனில் விசேட கூட்டம்


எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்ழ பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவது குறித்து லண்டனில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையில் அமர்வுகளை நடாத்துவது குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
அமர்வுகளை வேறும் நாட்டில் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.
எனினும், இந்த அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதா இல்லையா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வேறும் விடயங்கள் என்ற வகையீட்டுக்குள் இலங்கை அமர்வு குறித்து கலந்தாலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இலங்கையில் அமர்வுகளை நடாத்தக் கூடாது என இதுவரையில் எந்தவொரு நாடும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten