தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

இலங்கை வந்த இந்திய குழுவினர் நடவடிக்கையில் சந்தேகம்! அறிக்கை தருமாறு ஜனாதிபதி உத்தரவு


புகைப்படம் எடுக்கவேண்டி வரும் என்பதால் இலங்கை ஜனாதிபதியின் சந்திப்பை தவிர்த்தோம்! இந்திய எம்.பி.
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 12:29.24 AM GMT ]
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
மேலோட்டமாக பார்ப்பதற்கு அமைதியும் நிம்மதியும் நிலவுவது போலத் தோன்றினாலும், இலங்கையின் வட பகுதியில் உள்ளே மக்களிடையே கடும் கோபமும் குறைகளும் உள்ளன என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான சவுகத் ராய் தமிழோசையிடம் கூறினார்.
போருக்கு பின்னர் வட மாகாணத்தில் சிறிதளவு அமைதி திரும்பியிருந்தாலும், அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் நிறைய குறைகள் இருக்கின்றன என்று அக்குழுவின் ஒரு உறுப்பினரான சௌகத ராய் தெரிவித்தார்.
போர் முடிந்த பிறகு குறைகளைத் தீர்த்து, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும், 13 வது சட்ட திருத்தத்திலுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஆகியவை தொடர்பிலும் முன்னேற்றம் இல்லை என்றும் தமிழ் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஒரு கால அட்டவணையும் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கூறும் அவர், அது மக்கள் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் முதல்படியாக அது அமையும் எனக் கூறுகிறார்.
இலங்கையில் தாங்கள் கண்டது, கேட்டது பற்றி இந்திய அரசிடமும் நாடாளுமன்றத்திலும் பேசப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசு இனப்பிரச்சினைகான தீர்வைக் காணும் எனும் நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் கூறினார்.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதியைச் சந்திப்பதில் இந்தக் குழு ஆர்வம் காட்டவில்லை என்றும் சவுகத் ராய் கூறுகிறார்.
இறுதிகட்ட போரின் போது நடந்ததாகக் கூறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்கள் ஐ நா மனித உரிமைகள் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து தமது குழு அதிகம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை வந்த இந்திய குழுவினர் நடவடிக்கையில் சந்தேகம்! அறிக்கை தருமாறு ஜனாதிபதி உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 01:49.19 AM GMT ]
அண்மையில் இலங்கை வந்து திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவர்களின் விஜயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன.
இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியவுடன் தனது அதிகாரிகளை அழைத்து அவர்களின்  இலங்கை விஜயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஒன்பது பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்த நிலையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தது.
அங்கு அவர்கள் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன் கொழும்பு திரும்பியதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதனையடுத்தே இந்தக் குழுவினரின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கை ஒன்றினை அதிகாரிகளிடம் கோரியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten