யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சு இயந்திரங்கள் தீக்கிரையானதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறு அச்சு இயந்திரங்கள் பாதிக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்று பத்திரிகை ரோல்கள் மட்டுமே தீக்கிரையாகியுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது உள்ளே இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்கள உயரதிகாரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
மேலதிக விசாரணைகளை நடாத்துவதற்காக உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு, புலம்பெயர் அமைப்புக்கள் பத்திரிகை அச்சு இயந்திரங்கள் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten