ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மகசென்புர என்ற கிராமத்தைச்சேர்ந்த எச்.எம். சூரியபண்டார (வயது 38), ஜீவனிஅனுரதிக்கா (வயது 36) என்ற தம்பதியினர் நேற்ற நள்ளிரவு கொலைச்செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் கோடரியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உறவுக்கார பெண்ணே அவ்விருவரையும் கொலைச்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான இளம் பெண் கொல்லப்பட்டவர்களுடன் அதே வீட்டில் தங்கியிருந்த அதே வேளை கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளான நிமாலி பிரியதர்சினி (வயது 15) செவ்வந்தி பிரியதர்சினி (வயது 8) ஆகியோரை கொலைச்சம்பவத்தின் பின் தன்னுடன் அழைத்துக்கொண்டு இன்று அதிகாலை திருகோணமலையிலிருந்து ஜாஎல பிதேசத்திற்கு தப்பிச்சென்றுள்ளார் .
சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வெளியே கொல்லப்பட சூரியபண்டாரவின் சடலத்தை கண்ட அயலவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலயத்திற்கு கொடுத்த தகவலை அடுத்து கொலை பற்றிய விபரங்கள் வெளியாகியது.
பொலிசாரின் தீவிர விசாரனையை அடுத்து கொலைச்சந்தேக நபரும் அவருடன் சென்ற இரு பெண் பிள்ளைகளும்; ஜாஎல பிரதேசத்தில்வைத்து ஜாஎல பொலிசாரினால் இன்று பகல் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொலைச்சந்தேகநபரான இளம்பெண்ணுக்கும் கொல்லப்பட்டவர்களின் மூத்த மகளுக்கும் இடையே ஒருபால் உறவு இருந்ததாகவும் அதனை பெற்றோர் கண்டித்ததை அடுத்தே கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரைணை மூலம் அறியமுடிந்துள்ளது.
மரணவிசாரணை நேற்று காலை திருகோணமலை பதில் நீதவான் த.திருசெந்தில்நாதன் முன்னிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் நடைபெற்றது. கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் புல்மோட்டை பொலிசாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten