அவ்வீட்டில் உள்ள உள்ள அனைவரையும் முதலில் பொலிசார் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். பின்னர் அவர்கள் அவனைக் கைதுசெய்ய முற்பட்டவேளை அவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனையடுத்து பொலிசாருக்கும் டஸ்நாவுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனிடையே எவ்.பி.ஐ யினர் புதுவையான குண்டு ஒன்றை அங்கே பாவித்து இருக்கிறார்கள். அதனை வெடிக்கவைத்தால் பாரிய வெளிச்சம் தோன்றுவதோடு, சில கணங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகும். அன் நிலையப் பயன்படுத்தி ஆளை மயக்கும் மற்றுமொரு குண்டு ஒன்றையும் அவர்கள் அங்கே பயன்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து அவன் மயங்கியுள்ளான். ஆனால் அவன் அருகே சென்ற பின்னர் தான் தெரியும் அவன் உடலில் ஏற்கனவே 2 தோட்டாக்கள் பாய்ந்திருக்கிறது என்று.
உடனே பொலிசார் அம்புலன்ஸை வரவளைத்து அவன் உயிரைக் காப்பாற்ற போராடிவருகிறார்கள். மிகவும் ஆபத்தான கட்டத்தில் அவனை பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். பொஸ்டன் நகர மக்கள் ஒன்றுபட்டு , கரகோஷம் எழுப்பியுள்ளார்கள். பொலிசாரை கட்டி அணைத்து அவர்கள் முத்தம் கொடுக்கிறார்கள். குற்றவாளியை கண்டுபிடித்தமைக்காக அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். பலர் அமெரிக்க கொடிகளை ஏந்தியவண்ணம் நாம் அமெரிக்கர்கள் என்று கோஷமிட்டனர். வழி எங்கும் பொலிசாரை ஒரு ஹீரோ போல மக்கள் பார்த்து வரவேற்றார்கள். பொல்சாருக்கும் மக்களுக்கும் இடையே பலத்த உறவுப் பாலம் ஒன்றும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதனை இங்கே பார்க்கும்போது உணரப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4893
Geen opmerkingen:
Een reactie posten