10 பேரைக் கொன்று தப்பியோடிய புலி உறுப்பினரை பிடிக்க தனிப்படை !
புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தாக்குதல் படகு "இந்துமதி"
20 April, 2013 by admin
இலங்கையில் கடுஞ்சமர் நடந்தவேளை, விடுதலைப் புலிகளின் பலமான அணிகளுள் ஒன்றாக விளங்கியது கடற்புலிகளே. இறுதி நேரத்தில் கடல்புலிகள் பல தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தார்கள். இலங்கை கடற்படையானது இந்தியாவிடம் இருந்து சில போர்கப்பல்களையும், தாக்குதல் படகுகளையும் வாடகைக்குப் பெற்றது. இதனூடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பை அவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். இன் நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற ஒரு கடும் சமரில் புலிகளால் வடிவமைக்கப்பட்ட "இந்துமதி" என்னும் அதிவேகத் தாக்குதல் படகு இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கிவிட்டது.
இதனை இலங்கை இராணுவத்தினர் கரைக்கு கொண்டுவந்து அதனை பாரந்தூக்கியின் உதவியோடு வெளியே எடுத்துக்கொண்டு செல்லும் காட்சியையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். புலிகளால் மிகவும் நேர்த்தியாக வடிமைக்கப்பட்ட அதிவேக தாக்குதல் படகை, இலங்கை இராணுவம் கொண்டுசென்று சில திருத்தவேலைகளைச் செய்து தமது கப்பல் படையணியில் இணைத்துள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால், இலங்கை கடற்படையில் உள்ள பல அதிவேகத் தாக்குதல் படகுகள் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டவையே ஆகும். அவர்கள் தொழில் நுட்ப்பத்தையே இலங்கை தற்போது பாவித்துவருகிறது எனலாம்.
Geen opmerkingen:
Een reactie posten