தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினர் வசம்!


போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பது நல்லிணக்கமாகாது! இலங்கையின் ஐநா பிரதிநிதி பாலித
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:28.31 AM GMT ]
குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை விதிப்பதனை அரசாங்கம் நல்லிணக்கமாக கருதவில்லை எனவும், காயங்களை ஆற்றுவதே முக்கியமானது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி தண்டனை விதிக்குமாறு இலங்கை மீது மிதமிஞ்சிய அளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் தொடர்பிலான சகல விடயங்கள் குறித்தும் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இது சர்வதேச தரத்திலானது.
சட்ட மா அதிபர் திணைக்களமும், இராணுவ நீதிமன்றமும் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளை விடவும் துரித கதியில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை நிறுவப்பட்டுள்ளது.
நல்லிணக்க முனைப்புக்களில் நிலவும் சிக்கல்களை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட்டு வருகின்றது.
முழு அளவிலான நல்லிணக்கத்தை குறுகிய சில ஆண்டுகளில் ஏற்படுத்தி விட முடியும் என்பதில் நம்பிக்கை கிடையாது.
ஒரே இரவில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த முடியும் என எவரும் கருதிவிடக் கூடாது எனவும் பாலித கொஹண தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினர் வசம்!
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:10.40 AM GMT ]
அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாடு திரும்பிய 39 புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாம் நேற்று பொறுப்பேற்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.
அரசியல் புகலிடம் கோருவதற்குத் தகைமையற்றவர்கள் எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 39 இலங்கையர்களும் அவுஸ்திரேலியா சென்றடைந்த விதம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அவுஸ்திரேலிய கடல் எல்லை பாதுகாப்புகளைத் தாண்டி அந்நாட்டின் நிலப்பரப்பை அண்மித்த 66 இலங்கையர்களில் திருப்பியனுப்பப்பட்ட 38 பேர் அடங்குவதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
இவர்களில் 36 ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் மட்டக்களப்பு, புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten