அமரிக்கரின் அவநம்பிக்கையை போக்க பலியான அப்பாவிகளோ??எப்படி இவர்களால் குண்டு கொண்டுவரப்பட்டது,அப்போ அமரிக்காவின் பாதுகாப்புச்செலவு வீணா?அதை மறைக்க அப்பாவிகளை பலியிட்டதா??பல கேள்விகள்!!அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த 15ம் திகதி நடைபெற்ற மரதன் போட்டியில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில், 3 பேர் பலியானதுடன் 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கடந்த 2001ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இத்தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியுள்ளது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின்பொழுது ரகசிய கமெராக்களில் பதிவான காட்சிகளை பார்த்ததில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பொஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் பொலிசார் மர்ம நபர்கள் சென்ற காரை கண்டறிந்து அவர்களை விரட்டி சென்றுள்ளனர். அப்பொழுது நடைபெற்ற தாக்குதலில் காரை விரட்டி சென்ற பொலிசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அதில் காரில் இருந்த மர்ம நபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மற்றொருவன் தப்பி ஓடி விட்டார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்
பொலிசார் நடத்திய விசாரணையில் பொஸ்டன் நகரில் மரதன் போட்டி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவர் என்று தெரியவந்தது. அவர் ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட டாமெர்லான் சார்நேவ்(26) ஆவார். கஜகஸ்தானுக்கு-இடம் பெயர்ந்த அவர் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளார்.
காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவரது தம்பி ஷோக்கர் சார்நேவ்(19) என்று தெரிய வந்தது. எனவே, அவரை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை பொலிசார் கைது செய்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மக்கள் கை தட்டி வரவேற்று பாராட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை பொலிசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
|
Geen opmerkingen:
Een reactie posten