தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

வவுனியாவில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை!


ஆனையிறவு சோதனைச் சாவடியில் மீண்டும் வாகனப் பதிவு! பயணிகள் விசனம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:53.44 AM GMT ]
ஆனையிறவு சோதனைச் சாவடியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஏ9 வீதி ஊடாகக் குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பஸ்கள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன.
கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும், தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பயணிகள் அனைவரும் வயது வேறுபாடின்றி இறக்கப்பட்டு முழுமையான வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் பயணிகளின் பொதிகளும் கடுமையாகச் சோதனையிடப்படுகின்றன.
இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்தனர்.

வவுனியாவில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:43.21 AM GMT ]
வவுனியாவில் இராணுவ முகாம் அமைப்பதற்காக தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா - பேயாடிக்கூழங்குளம் பகுதியில் 20 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளது.
வவுனியா - மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகஸ்தரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவின் நொச்சிமோட்டை கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பேயாடிகூழங்குளம் கிராமத்தில் A-9 வீதியோரமாகவுள்ள தனியாருக்கு சொந்தமான காணியே இவ்வாறு சுவீகரிக்கப்பட உள்ளது.
56ஆவது இராணுவ படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தை நிறுவுவதற்காக இந்தக் காணி சுவீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
1964ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின் படி சுவீகரிக்கப்பபட உள்ளது.
எனினும், தமக்கு சொந்தமான காணியை தம்மிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten