குறித்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வறுமாறு,
பொதுபலசேனாவை ஏதிர்ப்போம்
அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதஅமைப்புக்கள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். ஹலாலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய அவர்கள் இப்போது நமது சகோதரிகளின் அபாயாக்களை கழற்றி வீசப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். பல இடங்களில் அபாயாக்களை கழற்றுமாறும் முஸ்லிம் பெண்களை அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
கடைசியாக முஸ்லிம்களின் வர்த்தகங்களை முடக்கும் வகையில் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். அதன் முதல் கட்டமாகவே கொழும்பில் பெசன்பக் நிறுவனத்தை தாக்கி சேதப்படுத்தியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் இந்த பௌத்த இனவாத சக்திகளின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் திகரித்த வண்ணமே செல்கின்றன. நமது முஸ்லிம் தலைமைகளோ இதுபற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்காது மௌனம் சாதிக்கின்றன.
முஸ்லிம்களாகிய நாமும் இந்தத் தருணத்தில் நம்மால் இயன்ற அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். கடந்த 25.03.2013 அன்று நமது பகுதிகளில் இடம்பெற்ற ஹர்த்தால் பெரும் வெற்றியளித்துள்ளது. தெயட கிருளவை நமது சகோதரசகோதரிகள் பகிஸ்கரித்தமையானது அரசாங்கத்திற்கும் பௌத்த இனவாதிகளுக்கும் பலத்த அடியாகும்.
அந்தவகையில் தற்போது நிறுவனமொன்று முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனா அமைப்புக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. பொது பல சேனாவுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வழங்குகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு நமது பள்ளிகளைத் தாக்கி நமது குர்ஆனை இழிவுபடுத்தி நமது ஹலாலை இல்லாதொழித்து நமது சகோதரிகளின் மானத்தில் கைவைக்கும் பொது பல சேனாவுக்கு நாமே நம்மை அறியாமால் நிதி வழங்கலாமா? எனவே பொதுபல சோனவுக்கு நிதிவழங்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten