கட்டாயம் இதன் வீடியோ பதிவைப் பாருங்கள். இதன் பிறகு நடந்த விவாதத்தில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அசோக் மேஹ்தா, சந்தீப் உன்னிதன் ஆகியோர் இலங்கை செய்வது எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்றும், போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதில் இலங்கை மிக மோசமாக நடந்து கொள்வதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக பேசினார்கள்.
1880களின் அமெரிக்க சிவில் யுத்தத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற வடக்கு மாகாணக் காரர்கள் தோல்வியுற்ற தெற்கு மாகாணத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அமைதியின் சின்னமாக தங்கள் போர் நினைவகத்தை (Gaetysburg) அமைத்தார்கள் – ஒருங்கிணைந்த அமெரிக்காவை உருவாக்க அது உதவியது. ஆனால் இலங்கை செய்வது அதற்கு நேர்மாறானது என்று அருமையாக ஒரு கருத்தை சொன்னார் அசோக் மேத்தா.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை உரத்த குரலில் திமுக செல்வகணபதி எடுத்துரைத்தார் (கனிமொழி ராஜபட்சேக்கு மாலை போடும் படத்தைக் காட்டி திமுகவின் இரட்டை வேடம் பற்றீக் கேட்டபோது கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்). எழிலன் நாகநாதன் எல்.டி.டி.ஈ ஆதரவு தொனி இல்லாமல் நிதானமாக தமிழர் உரிமைகள் பற்றி பேசினார்.. இலங்கை அரசு செய்வதில் தவறொன்றூம் இல்லை என்ற தொனியில் பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஜி பார்த்த சாரதி ஆகியோரை நிகழ்ச்சியை நடத்திய ராஹுல் கன்வால் & மற்றவர்கள் சங்கடப் படுத்தும் கேள்விகளால் துளைத்தனர். இலங்கை அரசின் உணர்வற்ற குரூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய Headlines Today சேனலுக்கு பாராட்டுக்கள்.
Geen opmerkingen:
Een reactie posten