தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

யாழ். கடற்பரப்பில் ஆழ்கடல் ரோலர் படகு மூலம் மீன் பிடிக்க தடை டக்ளஸின் பழிவாங்கல்?


யாழ். குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக கடற்றொழிலாளர்களைப் பழிதீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் அமெரிக்க ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.நகரில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது. அதன் போது கடற்றொழில் சமூகங்கள் இதில் கலந்து கொள்வதைத் தவித்தமையே இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குடாக்கடலில் சுமார் 850 ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் மூலம் தொழில் செய்வேர் உள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விரைவில் வடமாகாண சபை ஏற்படுத்துவதற்கான தேர்த்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தனது அரசியல் இராஜதந்திரத்தை அமைச்சர் டக்ளஸ் காட்டியுள்ளார்.
எது எவ்வாறு இருந்தாலும் அரசியல் காய்நகர்த்தலுக்காக அலைகடலில் மோதும் மீனவ குடும்பங்களை பட்டினியில் போடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாகவே இதனை மீனவ சமூகம் பார்ப்பதாக கூறுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten