தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

பொதுபலசேனா அமைப்பில் பிளவு?


யாழில் தலைகீழாக பறந்த இலங்கைத் தேசியக் கொடி
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:38.20 PM GMT ]
இலங்கையின் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு போட்டியின் போதே இலங்கைத் தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது.
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அதனை இறக்கி திரும்பவும் முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர்.
யாழ் நவாலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் போதே இலங்கைத் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது.


பொதுபலசேனா அமைப்பில் பிளவு?
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:25.21 PM GMT ]
சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான பொதுபல சேனா அமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபலசேனா அமைப்பு, ஹலால் பிரச்சினை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் பாரியளவு போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைப்பில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், பிளவு ஏற்பட வாய்ப்பில்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பேச்சாளர் மற்றும் இணைப்பாளர் ஒருவருக்கு இடையிலேயே பிரதான முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten