தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக ஜே.வி.பி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்


மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் சாட்சியங்களுடன் தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்!- டிரான்பெரன்சி
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:34.26 AM GMT ]
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் சாட்சியங்களுடன் தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென டிரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறான சாட்சியங்களின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சாரக் கட்டண உயர்விற்கு அனுமதி அளித்தது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.
மக்கள் வழங்கிய சாட்சியங்களுக்கு புறம்பான வகையிலேயே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து நுகர்வோரின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக ஜே.வி.பி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:50.20 AM GMT ]
இலங்கையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்றைய தினம் இரவு ஜே வி பியினர் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
மஹரகமவில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஜே வி பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்சார கட்டணம் தற்போது அமுலாக்கப்பட்டுள்ளது.
மே மாத மின்சார கட்டணம், இதுவரையில் பாவித்து வந்த மின்கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிர்வாக திறன் இன்மையே இந்த மின்சார கட்டண அதிகரிப்புக்கு காரணம் என்று ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில் இதற்காக பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஜே வி பியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten