தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

சமாதானத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான உத்தேச சட்டம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!


சமாதானத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான உத்தேச சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன, மத மற்றும் குல பேதங்களை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார புதிய உத்தேச சட்டமொன்றை தயாரித்துள்ளார்.
இந்த சட்டமே அண்மையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிடுவார் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உள்ளடக்கங்களை கருத்திற் கொண்டு சட்டத்தை அனுமதிப்பது குறித்து அறிவிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் எழுத்து மூலமோ அல்லது வாய் மொழி மூலமோ கருத்து வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிகோலும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

87-89 கலவரப் பகுதியில் காணாமல் போனோர் குறித்து ஜே.வி.பி ஆய்வு
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:58.34 AM GMT ]
கடந்த 1987 - 1989ம் ஆண்டுக் காலப்பகுதியில் காணாமல் போன தங்களின் உறுப்பினர்கள் குறித்து ஜே வி பி உள்ளக ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக விசேட சட்டத்தரணிகள் குழு ஒன்றையும் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இந்த காலப்பகுதியில் காணால் போனவர்களின் குடும்பத்தாரை சந்தித்து, சாட்சியங்களை திரட்டி வருவதாக, அதன் பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தளை வைத்தியசாலையிக்கு அருகில் அண்மையில் 150க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இவையாவும் 1980ம் ஆண்டுகளில் புதைக்கப்பட்டவை என்று இரசாயன பகுப்பாய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவை ஜே வி பியின் முன்னாள் உறுப்பினர்களுடையதாக இருக்கும் என்று ஜே வி பி தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் குறித்த விடயத்துகக்கு சாட்சியமாக காணாமல் போன தங்கள் உறுப்பினர்களின் உறவினர்களை முன்னிறுத்த ஜே பி பி நடவடிக்கை எடுத்துள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten