தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

அன்னை பூபதி உட்பட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் மற்றும் ஆனந்தபுரத் தளபதிகளின் நினைவு வணக்க நிகழ்வு!!


சீனா நிலநடுக்கம்! 200ற்கு மேற்பட்டோர் பலி!- இலங்கை ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 12:45.21 AM GMT ]
சீனாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் இருநூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இரங்கலை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி 11ம் ஜின்ங்பிங்கிற்கு ஜனாதிபதி விசேட இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இருநூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் செங்டு நகருக்கு மேற்கே மலைக் கிராமங்களை 6.6 புள்ளிகள் வலுக்கொண்ட இந்த பூகம்பம் தாக்கியதில் சுமார் 11 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை மக்கள் இந்த நெருக்கடியான தருணத்தில் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களை மனிதனினால் கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த அனர்த்தத்திற்கு உதவிகள் வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது என்றாலும், இந்தக் கட்டத்தில் வெளிநாட்டு உதவிகள் தேவைப்படவில்லை என்று சீனா கூறியிருக்கிறது.

அன்னை பூபதி உட்பட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் மற்றும் ஆனந்தபுரத் தளபதிகளின் நினைவு வணக்க நிகழ்வு

[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:04.41 AM GMT ]
1988 ம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் நாள் உலக வரலாற்றில் ஒரு தமிழ் தாய் நான்கவது வல்லரசு நாட்டுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக் கொண்டார். இந்நிகழ்வு உலகத் தமிழர்களையும் தமிழீழ மக்களையும் சாத்வீகப் போராட்டத்தை கற்றுத் தந்த தேசத்திற்கு எதிராக மீண்டும் ஒருமுறை கிளர்ந்தெழ வைத்தது. 
ஏப்ரல் 19 தென் தமிழீழ அன்னையர் முன்னணியின் போராட்டத்தை உலகறியச் செய்தநாள். உலகத் தமிழ் மக்களுக்கு அன்னை பூபதி என்கின்ற தியாகச் செம்மலை அறிமுகப்படுத்திய நாள் இந் நாளையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசிய நாட்டுப்பற்றாளர் நாளாக பிரகடனம் செய்து மகிமைப்படுத்தினார்.
2009 ம் ஆண்டு எமது விடுதலைப் போராட்டம் மிக இக்கட்டான நிலையை சந்தித்து நின்றவேளை இறுதிக்கட்ட முறியடிப்பிற்கு தயார் படுத்தப்பட்டிருந்த தளமே ஆனந்தபுரம். இதை நன்கு உணர்ந்திருந்த எதிரியும் அன்னிய சக்திகளும். சர்வதேச சட்ட போர் விதிமுறைகளை மீறி திட்டமிட்டு செயற்பட்டதாலேயே, நாம் எமது வீரத் தளபதிகளையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும். இழந்து நிற்கின்றோம். மீண்டும் வேர் விடுவோம் விழுதெறிவோம் அவர்களின் நினைவுகளுடன் போராடுவோம்.
அந்தவகையில் அன்னை பூபதி உட்பட அனைத்து நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் மற்றும் ஆனந்தபுரத்தில் காவியமான வீரத் தளபதிகள், இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்குமான வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை (21/04/2013) 6.00 மணிக்கு Brookeside Road, Hayes, Middlesex, UB4 0PL எனும் முகவரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியும் மூன்று மாவீரர்களின் தாயுமான திருமதி இரத்தினேஸ்வரி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அன்னை பூபதி, உட்பட நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் மற்றும் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கான ஈகச்சுடர்களை மாவீரர் ஜீவனின் சகோதரி திருமதி சபாரட்ணம் மாவீரர் சங்கரின் சகோதரி, கேதீஸ்வரி மாவீரர் கோமகனின் தாயார் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசபை உறுப்பினர் நிமலன் சீவரத்திணம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கான மலர் மாலைகளை மாவீரர் இளையவள் அவர்களின் சகோதரன் குமார். மாவீரர் துவாரகனின் சகோதரன் நவம். தேசியச் செயற்பாட்டாளர்களான திரு ரவி. மற்றும் அமர்நாத் ஆகியோர் அணிவித்தனர்.
நினைவுரையினை நாட்டுப்பற்றாளர் அழகராச, அவர்களின் மகனும் மாவீரர் பரந்தாமனின் சகோதரனுமாகிய திரு தும்பன் அவர்களும். சிறப்புரையினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் திரு மாறன் அவர்களும் நிகழ்த்தினர். இறுதியாக உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்
பிரித்தானியா

Geen opmerkingen:

Een reactie posten