தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

கூட்டமைப்பி​ன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சல்லடை போட்ட பொலிசார்!


ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களுக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 03:07.05 PM GMT ]
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று கொழும்பில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அலுவலகம் முன்பாக ராவணா சக்தி எனும் அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் இலங்கை வீரர்கள் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும், தமிழ் நாட்டுக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதித்திருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில், இலங்கையை பிளவுபடுத்தும் முயற்சிகளில் தமிழக அரசியல்வாதிகள் ஈடுபடுவதாகவும் இந்திய நடுவண் அரசு அதற்குத் துணைபோவதாகவும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களை அனுமதித்ததன் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பும், போட்டிகளில் பங்கேற்க சென்றமைக்காக இலங்கை வீரர்கள் சிலரும் தேச துரோக செயலில் ஈடுபட்டுள்ளதாக ராவணா சக்தி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துகொண்டு திரும்பும் இலங்கை வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பி​ன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சல்லடை போட்ட பொலிசார்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 03:46.29 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சி பிரசேத உறுப்பினரான மாவேற்பிள்ளை அன்ரன் டானியல் (ஒஸ்மன்- வயது 36) என்பவரது ஸ்கந்தபுரத்தில் உள்ள வீட்டில் அரசிற்கு எதிரான ஆவணங்களும் ஆயுதங்களும் இருப்பதாகக் கூறி கிளிநொச்சி பொலிசார் சல்லடை போட்டுத் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
2011ம் ஆண்டு பிரதேசசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஸ்கந்தபுரம் அக்கராயன் மக்களின் தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துபவராகவும் கூட்டமைப்பின் அதி தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கும் ஒஸ்மன் வீட்டிற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து சற்று முன்னர் சீருடையில் விரைந்த பொலிசார் நீதிமன்ற கட்டளைகளே அல்லது தேடுதல் செய்வதற்கான தகுந்த ஆவணங்களோ இன்றி கட்டாய தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஒஸ்மன் வீட்டில் இருந்திருக்கவில்லை எனவும் அவரது மனைவி மற்றும் பிள்கைள் இருக்கும்போதே அனுமதியின்றிய தேடுதல் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒஸ்மன் விடுதலைப் புலிகளின் தேசிய செயற்பாட்டாளர் எனவும் சிறிதரன் எம்.பியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் மனைவி மற்றும் பிள்ளைகளை மிரட்டிய பொலிசார், அங்கு ஆயுதங்கள் மற்றும் அரசிற்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிறிதன் எம்.பியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
இச்சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அரசு கூட்டமைப்பு மற்றும் மக்களுக்கான தனது செயற்பாடுகளை முற்றிலும் முடக்குவதற்காக மும்முரமாக செயற்படுகின்றது எனவும் தன்னுடன் நெருங்கி மக்களுக்காக வேலை செய்பவர்களை பயமுறுத்தும் வேலைகளில் பகிரங்கமாகவே ஈடுபடுகின்றது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தான் இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி சுகததாச அவர்களுடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது,
119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இத்தேடுதல் இடம்பெற்றதாகவும் மேலதிக தகவல்களை விசாரித்து தெரிவிப்பதாகவும் கூறிய அவ் அதிகாரி, இதுவரையில் எவ்வித தகவலையும் தெரிவிக்கவும் இல்லை என சிறிதரன் எம்.பி தமிழ்வின்னுக்கு தெரிவித்தார்.


Geen opmerkingen:

Een reactie posten