மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 100 மதகுருக்கும் வன்னிக் கட்டளைத் தளபதிக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதன் போதே பொனிபஸ் பெரேரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர்கள் மத்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அபிவிருத்தியும் சமாதானமும் நிலவி வருகின்ற வேளையில் பிரிவினைவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது.
எனினும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாட்டுக்குள் தனிநாடு என்ற சிந்தனை கனவாகவே கருதப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமனானவர்கள் எந்தவிதமான பிரிவினைகளும் இல்லை. அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைப்பது நியாயமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten