தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

முகாம்களில் 23 வருடங்களாக இராணுவத் தளபதி ஹத்துருசிங்க, டக்ளஸ் ஆகியோரால் வாழ முடியுமா!- வலி.வடக்கு மக்கள் கேள்வி!!


பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து நீக்கப்படக் கூடிய வாயப்ப்பில்லை!- வெளிவிவகார அமைச்சு
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:34.11 AM GMT ]
பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்ற அச்சம் தங்களுக்கு இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கே.அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்கவும், எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் வேறொரு நாட்டில் நடத்தவும் தீர்மானம் எடுப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொதுநலய நாடுகளின் அமைச்சர்கள் செயற்குழு லண்டனில் ஒன்று கூடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் முன்னதாக இலங்கை விடயம் உள்ளடக்கப்பட்டிராத போதும், பின்னர் தென்னாப்பிரிவில் நடைபெற்ற சட்ட வல்லுனர்கள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை விடயம் இந்த அமைச்சரவை செயற்குழு மாநாட்டில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இதனை நிராகரித்துள்ள வெளியுறவு செயலாளர், ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் மேற்கொண்ட பல்வேறு சந்திப்புகளின் போது, இலங்கையை பொது நலவாய நாடுகளில் இருந்து நீக்கவோ அல்லது அதன் மாநாட்டை கொழும்பில் நடத்தாமல் விடவோ போவதில்லை என்று பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் உறுதியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


முகாம்களில் 23 வருடங்களாக இராணுவத் தளபதி ஹத்துருசிங்க, டக்ளஸ் ஆகியோரால் வாழ முடியுமா!- வலி.வடக்கு மக்கள் கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:43.22 AM GMT ]
வலி. வடக்கில் தமிழ் மக்களின் 6400 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது நில அபகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பில் வலி.வடக்கு பகுதி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வலி வடக்கு பிரதேச சபை மற்றும் மீள்குடியேற்ற சபை என்பன அறிவித்துள்ளன.
மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு-
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று நடைபெற்றக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கின்றது.
முகாம்களில் இராணுவத்தளபதி ஹத்துருசிங்க,  டக்ளஸ் தேவாந்தா ஆகியோரால் வாழ முடியுமா!- மக்கள் கேள்வி
வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றோம் இந்த முகாம்களில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் இராணுவத்தளபதி ஹத்துருசிங்கா ஆகியோரால் வாழ முடியுமா என்று வலிகாமம் வடக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற வலிகாமம் வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நேற்று ஒட்டுப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு நோட்டிஸ் உடனடியாக அகற்றப்பட்டு, அப்பகுதியில் தங்களை உடனடியாக மீள்குடியேற்ற வேண்டும். இதனை உடனடியாக செய்யத்தவறினால் எதிர்வரும் 29ம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினை செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் நடாத்தப்படும் என்று பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். அரசாங்கம் எங்களை மீள்குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த எமக்கு தற்போது எமது காணி படையினரின் தேவைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த முறை நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 3 மாத்திற்குள் வலி வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.
8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை. அதற்கு மாறாக எமது வளமான பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
23 மூன்று வருடங்களாக நாங்கள் அகதியாக முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழந்து வருகின்றோம். நாங்கள் 23 வருடங்காக வாழும் வாழ்கையை ஒரு நாள் அமைச்சர் டக்களஸ் தேவாந்தாவும் இராணுவத்தளபதி ஹத்துருசிங்கவும் வாழ்ந்து பார்க்க முடியுமா?
இவ்வாறு நாங்கள் கதைத்தால் நாளை நாங்கள் காணமல் போனவர்களின் பட்டியலில் இடம்பிடித்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும் தலைக்கு மேல் போய்விட்டாதால் எங்கள் பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும்.
அதற்காக எதிர்வரும் 29ம் திகதி தொடக்கம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் தொடரும் என்றும் இது படிப்படியாக மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிடும் பேராட்டமாக மாற்றமடையும் என்று அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten