[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:32.47 AM GMT ]
வடக்கில் அரச காணிகளில் புலிக் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணி காரியாலயத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமாக காணப்பட்ட காணி உறுதி ஆவணங்களை அழித்து, அந்தக் காணிகளில் புலி உறுப்பினர்கள் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கு ஆதரவான குடும்பங்கள் எவ்வித காணி உரிமையும் இன்றி இந்தக் காணிகளை அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 200 தமிழர்களின் காணிகளையும் இவ்வாறு புலிகள் சுவீகரித்துள்ளனர்.
புலிகள் இவ்வாறு காணி உறுதிகளை அழித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் அதிக இராணுவப் பிரசன்னம்! சிவில் நிர்வாகம் இல்லையென அமைச்சர் வாசுதேவ ஒப்புதல் வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 03:16.41 AM GMT ]
வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது முற்றிலும் உண்மையென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாயணகார தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் இனப்பரம்பலில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பினர் கூறி குற்றச்சாட்டானது ஏற்க முடியாதது. ஆனால் வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம். குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடுகள் உள்ளன.
வடக்கில் குடியியல் நிர்வாகம் இல்லை. எனவே இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி முழமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் தமிழ் மக்களை அரசாங்கம் அடிமைப்படுத்தவில்லை.
தமிழ் மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
எமது போராட்ட வரலாற்றி பொன்னாலை புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடம்!- சிறீதரன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 03:36.53 AM GMT ]
பொன்னாலை மண் என்பது எமது போராட்ட வரலாற்றில் முதன்மையானது. எமது போராட்டத்தின் வரலாற்றில் பொன்னாலை வரதராஜப் பொருமாள் கோயில் என்பது மிகவும் முக்கியமானதும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடமாக உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அமரர் எஸ்.எஸ். சின்னையா ஞாபகார்த்தமாக நேற்று முன்தினம் புருவருடத்தினத்தன்று பொன்னாலை மான்பாய்ந்த தரவையில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் இந்நிகழ்விற்கு மாட்டு வண்டிகள் போட்டியில் வந்து கலந்து கொண்டதோடு, பெருமளவான மக்களும் இதனைக் கண்டு கழித்தனர்.
இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.
இரண்டு தசாப்தங்களின் பின்னரே மாட்டுவண்டிச் சவாரி, கைக்கொடி சவாரி, காளை அடக்குதல் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த போட்டிகள் மீண்டும் நடைபெறுவது மிக நல்ல ஒரு விடயம்.
பொன்னாலை என்பது எமது போராட்ட வரலாற்றில் முதன்மையானது. எமது போராட்டத்தின் வரலாற்றில் பொன்னாலை வரதராஜப் பொருமாள் கோயில் என்பது மிகவும் முக்கியமானதும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடமாகவும் உள்ளது.
அந்த மண்ணில் மீண்டும் இப்போட்டிகளை ஆரம்பிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லது.
இன்று எமது இனம் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குள்ளாகத் தள்ளப்பட்டிருந்தாலும் கலாசார, இனத்தின் அடையாளங்களை பாதுகாக்கும் கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten