தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

குற்றவாளிகளில் ஒருவர் சிறிலங்கா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர்’ – ரஸ்யப் பெண் !


‘குற்றவாளிகளில் ஒருவர் சிறிலங்கா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர்’ – ரஸ்யப் பெண்


தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய – தனது நண்பரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் சிறிலங்கா அதிபருக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்.
தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு சிறிலங்காவின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக – சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு செவ்வி அளித்துள்ளார்.
24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்ய மொழி பட்டதாரி.
அவருடன் சிறிலங்காவில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆண் நண்பரான பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான செஞ்சிலுவைப் பணியாளரான குரம் சேய்க் என்பவரே கொலை செய்யப்பட்டார்.
தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய – குரம் சேய்க்கை கொலை செய்த குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று அச்சம் கொள்வதாக கச்சேவா கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
“அங்கு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பே இல்லை, ஆனாலும் நீதி நிலைநாட்டப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை” என்கிறார் கச்சேவா.
‘எனக்குத் தெரியும், எனது இடத்தில் குரம் இருந்திருந்தால், இறுதிவரை செல்வார், அது என்னவோ அதையே நானும் செய்ய வேண்டும்”
சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் செயற்கைக் கால்களைப் பொருத்தும் செஞ்சிவைக் குழுவின் வல்லுனரான குரம், வடகொரியாவில் பணியாற்றிய போது, 2009ல் கச்சேவாவை சந்தித்தார்.
அப்போது தலைநகர் பியொங்யங்கில் கொரிய மொழி கற்றுக்கொண்டிருந்தார் கச்சேவா.
குரம் காசாவுக்கு இடமாற்றம் செய்யப்படும் வரை அவர்களின் நட்புறவு தொடர்ந்தது.
சிறிலங்காவில் விடுமுறையை கழிக்க வந்திருந்த அவர்கள், தங்காலையில் தங்கியிருந்த போது, விடுதிக்கு வந்த குழுவொன்றுடன், நத்தார் இரவு விருந்தின் போது சேய்க்குக்கு சிறிய பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது சற்றுத் தொலைவில் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த கச்சேவா பிரச்சினையை தீர்க்க அவர்களை அணுகிய போது, ஒருவர் தவறான நோக்கத்துடன் துரத்தத் தொடங்கினார்.
விடுதியை நோக்கித் திரும்பி ஓட முனைந்த போது அந்தக் குழுவினர் அவரை சூழ்ந்து கொண்டனர். எத்தனை பேர் என்று அவருக்குத் தெரியவில்லை. “நான் அவர்களை பார்க்கக் கூட முடியவில்லை. அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். நான் நிலத்தில் விழுந்தேன். எனது கைகளால் தலையைப் பொத்திக் கொண்டேன். அதனால் எவரையும் பார்க்கமுடியவில்லை.” என்றார் அவர்.
“நீச்சல் குளத்தை அடுத்து அது நடந்தது, .திடீரென அவர்கள் உதைத்தனர். குத்தினர்.” அவரைத் தாக்கியவர்கள் நீச்சல் குளத்தினுள் துக்கி வீசினர். “குளத்தில் இருந்து தப்பிக்க நான் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை.” இறுதியில் ஒருவாறு வெளியேற கச்சேவாவின் தலை உடைந்திருந்தது.
“நான் குளத்தின் இன்னொரு பக்கம் வழியாக வெளியேறினேன். சில அடிகளை எடுத்து வைத்தபோது, குரம் தரையில் கிடந்ததை பார்த்தேன். அவரை நோக்கி ஓடினேன். அவரது பெயரைச் சொல்லி அழைத்தேன். ஆனால் பதில் இல்லை. அவருக்கு நினைவு கொண்டு வரமுயன்றேன். அவருக்கு நினைவு கொண்டுவர எதுவுமே இருக்கவில்லை.“
சேய்க்கின் முகத்தில் வெட்டப்பட்டிருந்ததை கச்சேவா கண்டார். அவரைக் கொன்றது குத்துக் காயமா குண்டுக்காயமா என்பதைக் கவனிக்கவில்லை.
“எதும் செய்யமுடியாத – உதவியற்ற நிலையில் இருந்த நான் சத்தமாக கத்தினேன். அதன் பின்னர் நான் நினைவிழந்து விட்டேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு பின்னர் எதும் ஞாபகத்தில் இல்லை.“
அந்தக் கட்டத்தில் தான், அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது.
ரி சேட் அணிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து எழுந்திருந்த போது தான் அவரது அடுத்த நினைவுகள் தெரிகின்றன.
அந்த ரீசேட் அவருடையது அல்ல. அவருடைய ஆடைகள் இரத்தம் தோய்ந்த நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உள்ளாடை காணாமல் போயிருந்தது. அவரது முகம் வீங்கியிருந்தது. உடலில் காயங்கள் காணப்பட்டன.
நத்தார் நாளன்று காலையில் விடுதியின் அறையொன்றில் கச்சேவா நிர்வாணமாக – மயக்கத்தில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சிகள் கூறினர்.
அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.
கச்சேவாவுக்கு தான் எங்கே – எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்று நினைவில் இல்லை.
“என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் சிந்திக்க முயற்சிக்க வேண்டாம். ஆனால் இது அவமானகரமானது. ஏனென்றால், அவர்கள் குரம்மை கொன்றுள்ளனர். என்னை பாலியல் ரீதயாக தாக்கியுள்ளனர்“ என்கிறார்.
அவரது உள்ளாடை கண்டுபிடிக்கப்படவில்லை. உடைகள் எங்கோ வீசப்பட்டன. இவை இரண்டுமே காவல்துறைக்கு மரபணுச் சான்றுக்கு உதவக் கூடியவை என்கிறார் கசேவா.
சாட்சிகளால், எட்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் சம்பத் சந்திர புஸ்ப விதானபத்திரண, தங்காலையில் உள்ளூராட்சி சபையின் தலைவர். அவரது குடும்பம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்டையது.
அந்த வழக்கில், ராஜபக்சவோ அல்லது விதானபத்திரண குடும்பத்தினரோ தலையிட்டதாக கூறாவிட்டாலும், கசேவாவும், சேய்க் குடும்பத்தினரும் இந்த விசாரணையின் அவசரக் குறைபாடுகள் இருந்ததாக நம்புகின்றனர்.
குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி எல்லா சந்தேகநபர்களுமே கடந்த நொவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
“அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, நான் அழிக்கப்பட்டு விட்டேன்“ என்கிறார் கச்சேவா.
இந்தச் சம்பவத்துடன் தொடர்டையவர்களை கண்டுபிடிக்க, மரபணு சான்று அறிக்கைக்காக காத்திருப்பதாக கடந்த மாதம் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
puthinappalakai
http://asrilanka.com/2013/04/21/17397


மகிந்தருக்கு நெருக்கமானவரே என்னை கற்பழித்தார் !
22 April, 2013 by admin


இது ஒரு செட்டப் என்று தெரியாத விக்டோரியா, திரும்பவும் விடுதிக்குள் சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி அவர் எழுந்து விடுதிக்குச் சென்றுவிட்டார். ஆனால் அவர் அங்கே வரமுன்னரே , அங்கிருந்த குழுவினர் பிரித்தானிய பிரஜயை அடித்து பின்னர் துப்பாக்கியல் சுட்டுக் கொன்றுவிட்டனர். இதேவேளை அவர்கள் விக்டோரியாவை பலமாகத் தாக்கி அருகில் உள்ள நீச்சல் தடாகத்தில் தள்ளியுள்ளார்கள். தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தோடு அவர் நீந்தி அடுத்த கரையை அடைய முற்பட்டுள்ளார். சினிமா படங்களில் வருவது போன்று அக்கரையிலும் அவர்கள் நின்று அவரை தாக்க முற்பட்டுள்ளார்கள். இதனை அடுத்து அவர் மற்றுமொரு கரைக்கு ரத்தம் ஒழுக ஒழுக நீந்திச் சென்று வெளியே ஏறியவேளை..... அங்கே தனது காதலன் நிலத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். நடந்தது என்னவென்று தெரியாமல், இறந்த காதலன் உயிருடன் உள்ளதாக நினைத்து அவனை உலுப்பி நினைவு திரும்பவைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அது பலனில்லாமல் போனது. 

இதேவேளை தன்னை நோக்கி சிலர் வருவதை அவரால் அவதானிக்க முடிந்தது. இருப்பினும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மயக்கமுற்றார். அவர் பல மணிநேரங்கள் கழித்து கண் முழித்தவேளை தான் ஒரு வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்தார். தனது உடைகள் அகற்றப்பட்டு ஒரு டீ சேட் மட்டுமே தாம் அணிந்திருந்ததை அவர் கண்டு தனக்கு என்ன நேர்ந்தது என்று சிந்திக்கிறார். தான் அணிந்திருக்கும் டீ சேட் முழுவதும் ரத்தக்கறை இருப்பதும், தனது உள்ளாடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் டீ சேட்டுடன் மட்டுமே தான் இருப்பதை அறிந்துகொண்ட அவர் தான் கற்பழிக்கப்பட்டுள்ளதையும் உணர்கிறார். அவர் உடல் எங்கும் காயங்கள் காணப்படுகிறது. இன் நிலையில் , விடுதியில் வேலைசெய்யும் நபர் தான் முதன் முதலாக விக்டோரியாவைப் பார்க்கும்போது அவர் ஆடைகள் ஏதும் இன்றி, முழு நிர்வாணமாகக் காணப்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தாம் மயக்கமுற்ற நிலையில் இருந்தவேளை தன்னை அவர்கள் கற்பழித்துள்ளார்கள் என்று தெரிவித்த விக்டோரியா, தன்னை நோக்கி முதலில் வந்த நபர், பின்னர் தன்னை தாக்கிய நபர் என்று சிலரை தன்னால் நிச்சயம் அடையாளம் காண முடியும் என்று கூறுகிறார்.

ஆனால் அவர்களை ஒருபோதும் இலங்கை அரசு தண்டிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏன் எனில் இக் கொலை மற்றும் கற்பழிப்போடு சம்பந்தப்பட்ட நபர்கள் மகிந்தருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் ஊர் அறிந்த உண்மையாகும். ஆரம்பத்தில் பொலிசார் தங்கலை பிரதேசசபை தலைவர் மற்றும் அவர் கூட்டாளிகளைக் கைதுசெய்தது. ஆனால் பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள். இவ்வழக்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது. இறுதியில் அனைவரும் தப்பிவிடுவார்கள். இதுவே இன்றைய இலங்கையின் நிலையாகும். இப்படியான ஒரு நாட்டிற்க்கா நாம் சுற்றுலா செல்ல இருக்கிறோம் என்று பல வெளிநாட்டவர்கள் அதிர்ந்துபோயுள்ளார்கள். ஆனால் இன்றும் சில தமிழர்கள் அங்கே சுற்றுலாவுக்குச் சென்று , இலங்கை அரசுக்கு அன்னிச் செலாவணி பெருக பேருதவிசெய்து வருகிறார்கள். அட சும்மா போய் வந்தால் கூடப் பரவாயில்லை. இப்ப இலங்கை நன்றாக இருக்கு என்று காமஸ் வேறு அடிக்கிறார்கள் அதனை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை !



அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.

Geen opmerkingen:

Een reactie posten