தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

கல்லூரிகளைத் திறந்தாலும் ஈழம் மலரும் வரை போராடுவோம்: மாணவர்கள் ஆவேசம்!


இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களை அடுத்து மூடப்பட்டிருந்த கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீது நடவடிக்கை கோரி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர்.
கல்லூரிகளை திறந்தாலும், இலங்கையில் தமிழீழம் மலரும்வரை தங்களது போராட்டம் தொடரும் என மனிதச் சங்கிலியில் கலந்துகொண்ட மாணவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
தமிழர் பிரச்சினையில் அலட்சியப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவர்கள், அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலகம் ஏற்பட்டது.
கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இலங்கைத் தூதர் கரியவாசத்தை கைது செய்ய வலியுறுத்தினர். இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்ச அரசுடன் தூதரக உறவை முறித்துக்கொள்ளவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கல்லூரிகள் நாளை முதல் செயல்பட்டாலும், தமிழர் படுகொலை குறித்த கண்காட்சி, கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாக மாணவர்கள் அறிவித்தனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கூறிய மாணவர்கள், விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாகூரின் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten