தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

அவுஸ்திரேலிய துறைமுகத்தைச் சென்றடைந்த 66 இலங்கையரில் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்


சவுதியில் 70க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தடுத்து வைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 04:05.01 AM GMT ]
சவுதி அரேபியாவில் 70க்கும் அதிகமான இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களின் வீசா முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அங்கு தங்கி இருந்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்மா பகுதியில் உள்ள பல்வேறு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்களுக்கான வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் சவுதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு அறியப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலிய துறைமுகத்தைச் சென்றடைந்த 66 இலங்கையரில் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 03:53.01 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் பிரதான துறைமுகத்துக்கு கடந்த வாரம் சென்ற இலங்கை அகதிகள் 66 பேருள் பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அகதிகளின் படகு நேரடியாக பிரதான துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் அவர்கள் தொடர்பிலான சட்ட விசாரணைகள் துரிதமாக இடம்பெறுகிறது.
இந்த நிலையில் அவர்கள் நேர்மையான அகதிகளாக இல்லாத பட்சத்தில், உடனடியாக அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten