களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சித்திரை புதுவருடப் பிறப்பினை முன்னிட்டும் கலை விழாவும் விளையாட்டு விழாவும் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த 1568ம், 1965ம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு ஒப்பந்தங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தால் கைச்சாத்திடப்பட்டன. பின்னர் அவ்வொப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதனால்தான் இன்று நாம் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்தும் கணக்கிடமுடியாத சொத்துக்களை இழந்தும் காணிகளை இழந்துமுள்ளோம். செல்வநாயகத்தினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படாவிட்டால் தமிழினம் இன்று பாரிய இழப்புக்களைச் சந்தித்திருக்காது.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்று ஒருபோதும் கூறமுடியாது. ஆனால் இலங்கை அரசு அதனை மறுக்கிறது. இனப்பிரச்சினை இல்லை என்று மூடி மறைப்பதற்கு அரசு ஆங்காங்கே அதுவும் நகர்ப் பகுதியில்தான் சிறு சிறு அபிவிருத்திகளை செய்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியை ஒருபோதும் மறுக்கவில்லை. அதனை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் எம்மினத்தின் பிரச்சினையினை இலங்கை அரசு தீர்த்து வைக்காத பட்சத்திலேதான் நாங்கள் வெளிநாடுகளை வேண்டி நிற்கின்றோம்.
இன்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கை அரசினை எதிர்த்து நிற்கின்றன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் தட்டிக்கேட்கும் கட்சியாக கூட்டமைப்பு காணப்படுகின்றது.
தற்போது அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது வரிகளைச் சுமத்தியுள்ளது. மின்சாரக் கட்டணம், பால்மா, பான் போன்ற அத்தியவசியப் பொருட்கள் பலவற்றிற்கும் விலைகளை அதிகரித்துள்ளது நொந்துபோய் இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு மிகுந்த சுமையாகவுள்ளது என குறிப்பிட்டார்.
தமிழ் தேசியத்திற்கு சோரம்போகாத சொத்து முனைத்தீவுக் கிராமம்!- பொன்.செல்வராசா
தமிழ் தேசியத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கி சோரம்போகாத சொத்தாக முனைத்தீவுக் கிராமம் விளங்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்வெளிப் பிரதேசத்திற்குட்பட்ட முனைத்தீவு கிரமத்தின் மேம்பவர் விளையாட்டுக் கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பும், புதுவருட விளையாட்டு விழாவும் நேற்று முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து கூறுகையில்,
இந்தக்கிராமத்தின் அபிவிருத்தியில் நாம் அக்கறை கொண்டுள்ளோம். இது ஒருபுறமிருக்க இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவரை அமெரிக்க அரசு உறுதிசெய்துள்ளது. இது இங்கையில் பல பாகங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது கே.டபிள்யூ.தேவநாயம் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமாகும். அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டது எனக் கூறிய பின்னர் 300 அப்பாவித் தமிழ் மக்கள் காணாமல் பொயுள்ளார்கள்.
இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதனை அறிய நாம் பாராளுமன்றம், பொலிஸ் தலைமையகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் போன்ற பல இடங்களில் முறப்பாடு செய்தோம் இதுவரையில் கண்டுகொள்ள முடியில்லை.
இவ்வாறு நாம் எம்மினத்தினையும் எம்மக்களையும் பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் அமைச்சர்களும் அமைப்பாளர்களும் இதுவரைக்கும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten