[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 07:31.50 AM GMT ]
யாழ். வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அந்தந்த காணிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதன்படி பிரதேசத்தில் 6400ஏக்கர் நிலம் 7கிராமசேவகர் பிரிவுகளில் ஆக்கிரமிக்கப்படுவதுடன், இராணுவத்தின் பற்றாலியன்களுக்கான தலைமையகம் அமைப்பதற்கென கூறியே குறித்த நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.
கொழும்பில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வடக்கில் 5 மாவட்டங்களிலும் அண்மையில் காணி அமைச்சினால் காணி சுவீகரிப்பு அலுவலகம் திறக்கப்பட்டபோது இந்த திணைக்களத்தினால் காணிப் பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில் 5 மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சுவீகரிப்பு என்ற பெயரில் இராணுவத்தினருக்காக ஆக்கிரமிக்கப்படுகின்றது.
இதன் ஒரு கட்டமாக வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விழுங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இந்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
மேலும் ஆக்கிரமிக்கப்படவுள்ள காணிகள் யாருடையவை என தமக்கு தெரியாது என்ற கருத்தும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் வலிகாமம் வடக்கில் 3ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் மட்டுமே படையினரிடம் இருப்பதாக யாழ்.இராணுவத் தளபதி கூறிவந்த நிலையில் 7 கிராமசேவகர் பிரிவுகளில் மட்டும் 6400ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படுவதன் மூலம் வலிவடக்கு மற்றும் கிழக்கில் எத்தனையாயிரம் ஏக்கர் நிலம் இராணுவத்தினரிடம் உள்ளது என்பது வெளிச்சம்.
மேலும் குறித்த காணிகளுக்கான உரிமையாளர்கள் இல்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை என கூறப்படும் நிலையில் அந்த காணிகளுக்குச் சொந்தமான மக்கள் இடம்பெயர்ந்து இன்று யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கும் 10வரையான இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:47.36 AM GMT ]
இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அமெரிக்க அறிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.
எவ்வாறாயினும் இந்த கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதித்துறை மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.
அதில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும், கொழும்பில் நடத்தவுள்ள மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை செயற்குழு கூட்டத்தில் இலங்கை விடயம் பேசப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விடயத்தை அமைச்சரவை செயற்குழு விவாதிக்கவுள்ளது.
இதன் போது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்ச குடும்ப ஆதிக்க அநீதி ஆட்சி! அமெரிக்காவின் குற்றச்சாட்டு முற்றிலும் சரி!- ஐதேக
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 07:33.02 AM GMT ]
அநீதியான ஆட்சியை நடத்திக் கொண்டு சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளைப் பகைத்துக் கொள்வதால் நாடுதான் அபாய நிலைக்குள் தள்ளப்படுகிறது.
எனவே, சர்வதேச சமூகத்துடனான முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதனுடன் சமரசப் பேச்சு நடத்த அரசு தயாரெனில், தாமும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று ஐதேகவின் சிரேஷ்ட உப தலைவரும், கண்டி மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012' என்ற அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 19ம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சி அதிகாரம், நிர்வாகத்தில் மேலோங்கிக் காணப்படுகிறது. நீதித்துறைச் சுயாதீனம் முடக்கப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைகள், பொலிஸாரின் தாக்குதல்கள், சித்திரவதைகள் தொடர்கின்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்கிக் காணப்படுகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் சரியானதும் உண்மையானதுமாகும்.
தினந்தோறும் நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத்தான் அமெரிக்காவும் முன்வைத்துள்ளது. சர்வதேசத்தின் பலமிக்க நாடுகள் எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அளவுக்கு அநீதியான ஆட்சியை நடத்திக்கொண்டு அவற்றைப் பகைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் தான் அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, அமெரிக்கா மற்றம் ஐரோப்பா உள்ளிட்ட பலமிக்க நாடுகளுடன் அரசு பகைமையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலை, நாட்டுக்குத்தான் பேராபத்தை ஏற்படுத்தும் என நாம் தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசோ எமது பேச்சைக் கருத்திற் கொள்ளாது செயற்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளை அவதானிக்கையில், "சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணும தேவையும், நோக்கமும் அதற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
சர்வதேச நாடுகளுடன் நட்புறவு என்பது அரசுக்குத் தேவை இல்லையெனினும், அது நாட்டுக்கு அத்தியாவசியத் தேவையாகும்.
எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு சர்வதேச நாடுகளுடனான முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டுவர அவற்றுடன் சமரசப் பேச்சுகளில் ஈடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு இவ்வாறானதோர் நடவடிக்கையில் இறங்கினால், அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நாமும் தயாராகவுள்ளோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten