[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 06:44.47 AM GMT ]
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபைத் தேர்தல் இவ் வருடம் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டது.
நீல அலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வடக்குத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ஆளும் கட்சி தயாரித்துள்ளது.
எதிர்வரும் மே தினத்திற்கு பின்னர் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் தனிநபர் வேட்பாளர்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
வடக்குத் தேர்தலை கோருவதற்கு புலிகளுக்கு கடந்த காலங்களில் வக்காளத்து வாங்கியவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
வட மாகாணசபைத் தேர்தலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆயத்தமாகிவிட்டது.
இதற்கான தயார்படுத்தலில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக வடக்குத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ஆளும் கட்சி தயாரித்துள்ளது.
இதேவேளை, எதிர்க் கட்சிகள், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எந்தவொரு பலமான வேட்பாளரையும் நிறுத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும்.
ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தும் என்றார்.
காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!- யாழ்.இந்தியத் தூதரகம்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 07:10.58 AM GMT ]
இந்த ஆழமாக்கும் பணியை மேற்கொள்வதற்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாக யாழ்.இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக் கூடாதென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை துறைமுகப் பகுதியில் மூழ்கியிருந்த கடற்கலங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பெரிய கப்பல்களை உள்வாங்கும் நோக்கில் துறைமுகத்தினை 8 அடி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் பணியை மேற்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து வரும் 15 நாட்கள் இந்த ஆழமாக்கும் பணி நடை பெறவுள்ளதாகவும் இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஆழமாக்கும் பணியை இந்திய தூதரக அதிகாரிகள், கடற்படையினர் உத்தியோக பூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
அரசுடன் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது! வெளிநாட்டிலுள்ள தூதர்களுக்கு இலங்கை கண்டிப்பான உத்தரவு!
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 06:58.03 AM GMT ]
இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த விவகாரமானது இலங்கை அரசுக்கு பெரும் சர்ச்சையாக மாறியதுடன், சீனா உள்ளிட்ட பல தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததாகவும் அறிய முடிகின்றது.
இதனையடுத்தே, கொழும்புடன் கலந்தாலோசிக் காது எவ்வித இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என தமது இராஜதந்திரிகளுக்கு இலங்கை பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்படி இனிவரும் காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, இராஜதந்திர கோட்பாடுகளுக்கு அப்பால் செயற்பட்டமை குறித்து அரசு, ஜாலிய விக்கிலமசூரியவை கடுமையாகக் கண்டித்திருக்கிறது என்றும் அறிய முடிகின்றது.
நாட்டுக்கு எதிராக கடும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில், தூதுவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டால் அது மேலும் அழுத்தங்களை உண்டுபண்ணும்.
இந்த விடயம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே அரசு இராஜதந்திர செயற்பாடுகளுக்கு புதிய சுற்றறிக்கையை வகுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten