தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி!!


அதிகளவானவர்களிடமிருந்து வருமான வரியை அறவீடு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:41.56 AM GMT ]
இலங்கையில் அதிகளவானவர்களிடமிருந்து வருமான வரியை அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இதுவரை காலமும் வரி அறவீடு செய்வதற்கான வருமான எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட தொகை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுவோரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
600,000 ரூபா வருடாந்த வருமானம் ஈட்டுவோருக்கே இதுவரை காலமும் வருமான வரி அறவீடு செய்யப்பட்டது.
எனினும், தற்போது இந்தத் தொகை 400,000 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
இந்த உத்தேசத் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இன்றும் நட்டாற்றில் பயணிகளுடன் தத்தளித்த இயந்திரப் படகு! மட்டு. மண்முனையில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 07:43.38 AM GMT ]
மட்டக்களப்பு மாவடத்தின் மண்முனை ஓடத்துறையினால் பயணிக்கும் பிரயாணிகள் தினமும் நட்டாற்றில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான போக்குவத்து மார்க்கங்களில் மிகப் பிரதானமான ஒன்றாகக் காணப்படும் மண்முனை ஓடத்துறையில் இரண்டு இயந்திரப் படகுகளை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை விடப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் ஒரு இயந்திரப்படகு மிக நீண்ட காலமாக பழுதடைந்துள்ளது.
தற்போது ஒரு இயந்திரப் படகு மாத்திரமே சேவையிலீடுபடுகின்றது.
தற்போது சேவையிலீடுபடும் இயந்திரப் படகும் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்லும் போது நடு ஆற்றினுள் வைத்து பழுதடைகின்றது.. பின்னர் பலத்த போராட்டத்தின் மத்தியில் இயந்திரத்தினை திருத்திய பின்பே ஆற்றினைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் மணிக்கணக்கில் மண்முனை நடு ஆற்றிற்குள் பாதையில் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றும்கூட (22.04.2013) காலை இவ்வாறு பயணிகளை ஏற்றிக் கொண்டு இயந்திரப் படகு சென்று கொண்டிருந்த வேளை நடு ஆற்றில் இயந்திரம் பழுதடைந்து இரண்டு மணித்தியாலங்கள் பயணிகள் நடு ஆற்றில் கொளுத்தும் வெயிலில் கிடந்து மறுகரை வந்து சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் எது எவ்வாறு அமைந்தாலும் பழுதடைந்து கிடக்கும் மற்றைய பாதையினை இதுவரை வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்தி சேவையில் ஈடுபடுத்தாமல் இருப்பது ஏன் என தொரியாதுள்ளது என பிரயாணிகள் வினா எழுப்புகின்றனர்.

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:27.37 PM GMT ]
நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் "ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்... தமிழீழ பெண்கள்" என்ற ஆவணப்படத்தை வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கியுள்ளார்.
இவ் ஆவணப்படத்தில் 2009ன் பின்னர் தமிழீழம் சென்று வந்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரின் பேட்டிகளும், சிங்களக் கொடுங்கோல் முகாமிலிருந்து மீண்டுவந்த தமிழீழப் பெண்களின் சாட்சிகளும் பேட்டிகளும் உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten