இலங்கை தூதர் காரியவசம், சிங்களவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கை தூதர் கரியவாசம் இந்தியாவின் வடமாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் சிங்களவர்கள் என்று பேசியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற வரம்பு மீறிய செயல்.
அவர், தூதரக அதிகாரி என்ற பணியை செய்யாமல் வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இதை அனுமதிக்க முடியாது
சிங்களவர்கள், வட இந்தியர்கள்தான் என்று கருத்துத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு கூற வேண்டும் என்றால், அவர் அதனை வெளியுறவுத் துறையிடம் தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தூதரக அதிகாரி தூதரக வேலை மட்டுமே செய்ய வேண்டும். இலங்கை தூதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றார் அமைச்சர் நாராயணசாமி.
Geen opmerkingen:
Een reactie posten