தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 april 2013

நாம் வேண்டுவது சட்டரீதியான ஆட்சியே அன்றி குண்டர்களின் ஆட்சி அல்ல!- வீ.ஆனந்தசங்கரி


வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் வெள்ளைக்கொடியுடன் சென்று மீள்குடியேறுவோம்!- அப்பாத்துரை விநாயகமூர்த்தி
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 10:06.37 AM GMT ]
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் வெள்ளைக்கொடியுடன் சென்று மீள்குடியேறுவோம் என்றும், அதற்கு தலைமை தாங்க தயார் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை வியாநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
25 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த இடங்களை விட்டு மக்கள் வெளியேறி பல்வேறு பிரதேசத்தில் மீள்குடியேற முடியாமல் வசித்து வருக்கின்றனர்.
குறிப்பாக 24 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்னமும் மீள்குடியேற முடியாத நிலையில் வாழந்து வருகின்றனர் என்றார்
குறிப்பாக வலிகாமம் வடக்குப் பிரசேத்தில் மயிலிட்டி மண் ஒருவளம் நிறைந்த மண். இந்த இடத்திற்கு செல்ல முடியாமல் 5000 ற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளுக்கு இனி நாங்கள் வெள்ளைக்கொடியுடன் சென்றே மீள்குடியேற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டால் அதற்கு தலைமை தாங்கிச் செல்ல தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாம் வேண்டுவது சட்டரீதியான ஆட்சியே அன்றி குண்டர்களின் ஆட்சி அல்ல!- வீ.ஆனந்தசங்கரி
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 10:24.11 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலத்தில் ஒரு குழுவினர் தேசியக் கொடியைத் தாங்கிய வண்ணம் மிகவும் வெட்கப்படக்கூடிய முறையில் பொலிசாரின் முன்னிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை தாக்கியுள்ளனர்.
இக்குழுவினரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு கிளிநொச்சி பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட இருபது பேருக்குமேல் காயமடைந்தும் அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவெனில்  இதன் போது பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட மூவரை எதுவித விசாரணையுமன்றி விடுதலை செய்த பொலிசாரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கௌரவத்தை மிகக் கீழ்மட்டத்திற்கு இறக்கி விட்டிருக்கிறது.
இச்சம்பவத்தின் பின்னணியில் உயர்பீடத்திலுள்ள யாரோ ஒருவரின் அங்கீகாரம் இருந்துள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
பயங்கரக் குற்றவாளிகள் உட்பட கண்டவர் நின்றவர் எல்லாம் பலவிதத்திலும் தப்பான வழியில் பணம் சம்பாதிக்க கிளிநொச்சியை தளமாகப் பாவிப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும்.
பல ஆண்டு காலமாக பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்த மக்கள் நிம்மதியடையாமல் தொடர்ந்தும் கூடுதலான பயப்பீதியுடன் வாழ்கிறார்கள்.
இந்தப் போக்கை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்காது போனால் கிளிநொச்சி மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி வரும்.
ஆயுதத்தின் சக்தி ஒருபுறம், அடியாட்களின் தொல்லை மறுபுறம் இருக்கும் போது அகிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாகிய நாங்கள் ஆண்டவனுக்கு முறையிடுவதைவிட வேறென்ன செய்யலாம்?
அரசியல்வாதியாக இருந்தாலும் சரி இராணுவத்தினராக இருந்தாலும் சரி நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படாமல் எல்லைமீறி செயற்பட்டு தெய்வங்களின் கடும் சினத்திற்கு ஆளாக வேண்டாம் என மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றேன்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து போதி நாயகருக்கும் அவருடைய போதனைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறந்த புத்தரின் வழியில் வாழ்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Geen opmerkingen:

Een reactie posten