தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

அழகு ராணிப் போட்டிக்கு பெண்களைத் தாருங்கள் என சிறுமிகளையும் தேடிப் பிடிக்கும் இராணுவம்: அழுது புலம் பெற்றோர் !


அழகு ராணிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறு பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் அழகு ராணிப் போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்போட்டியில் பங்கு பற்ற ஏழு தமிழ் பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல இராணுவம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இது தொடர்பில் சில பொது மக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவத்தினர், தமது பிள்ளைகளை மூன்று நாட்களுக்கு தம்முடன் அனுப்பி வைக்குமாறு கோரியதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் பல பெற்றோர் இதற்கு மறுத்து வரும் நிலையில் அவர்களை அச்சுறுத்தும் விதமான செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போட்டியில் 8 வகுப்பில் படிக்கும் மாணவிகளை கூட இராணுவம் கட்டாயப்படுத்தி வருவது பெற்றோர் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இராணுவத்தினரிடமிருந்து தமது பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க பலர் செய்வதறியாத நிலையில் அழுது புலம்புகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten